குக் வித் கோமாளி 5-இல் மற்றொரு விஜய் டிவி தொகுப்பாளர்! அப்போ பிரியங்காவிற்கு போட்டி இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் இதில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு சிலருடைய பெயர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இப்போது விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளர் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் கசிந்து இருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சி: ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது.
ஐந்தாவது சீசன்: அந்த வகையில் நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஐந்தாவது சீசன் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பும் சந்தேகங்களும் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி இனி நடக்காது என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். அந்த நேரத்தில் தான் விஜய் டிவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
புதிய நடுவர்கள்: அதாவது நடுவராக இருந்து விலகிய வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக நடிகராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கும் "மாதம்பட்டி ரங்கராஜன்" தாமுடன் இணைந்து இருக்கிறார். அதுபோல வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் பலரும் இந்த சீசனிலும் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
புதிய குக்குகள்: அதே நேரத்தில் குக்காக இந்த சீசனில் பிரியங்கா தேஷ் பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வசந்த், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் வி.டி.வி கணேஷ், youtuber இர்பான் என்று பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்பார்க்காத கோமாளி: அதே நேரத்தில் இந்த சீசனில் கோமாளியாக சீரியல் நடிகை ஷபி களமிறங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. காரணம் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான். அந்த பதிவில் குக் வித் கோமாளி ப்ரோமோவை பகிர்ந்த ஷபி இந்த நிகழ்ச்சிக்காக தான் அதிகமாக காத்திருப்பதாக கூறி இருந்தார்.
தொகுப்பாளர் ஜாக்குலின்: அதனால் இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் கோமாளியாக கலந்து கொள்ளப் போகிறாரா? அல்லது குக்காக கலந்து கொள்ளப் போகிறாரா? என்று உறுதியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
அதே நேரத்தில் ஏற்கனவே பிரியங்கா தொகுப்பாளராக இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக ஜாக்லினும் கலந்துகொள்ள போகிறார்... என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications