CWC 5 நடுவராகும் மாதம்பட்டி ரங்கராஜன்! விஷயமே இதுதானா? லீக்கான தகவல்.. ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர் என்று விலகிக் கொண்டு இருக்கின்றனர்.
இது ரசிகர்களுக்கு பெருத்த கஷ்டத்தை கொடுத்திருக்கும் நிலையில் இப்போது ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி பரவி வருகிறது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. அதனால் அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொரு வருடமும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலரையும் சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒவ்வொரு வருடமும் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த நான்கு சீசன்களாக இதையே பின்பற்றி வந்த இந்த நிகழ்ச்சி இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஐந்தாவது சீசனுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இது இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர்.
அதே நேரத்தில் நான்கு சீசன்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட்டும் திடீரென்று தானும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று கூறியிருந்தார். அதோடு தன்னோடு செஃப் தாமுவும் வந்துவிடுவார் என்று கூறியிருந்தார். பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார். அதோடு வார்த்தைகள் மாறினாலும் நண்பனின் நட்பு மாறாது என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
இப்படியான நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கினால் அதில் செஃப் தாமு இருப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ சூட் முடிவடைந்துவிட்டது என்றும், இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம் பட்டி ரங்கராஜன் களமிறங்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
அதோடு மாதம்பட்டி ரங்கராஜனின் என்ட்ரி இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜனின் சமையல்தான் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதோடு சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான இளைஞர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர்.
இதனால் இவரை இந்த நிகழ்ச்சியில் இறக்கினால் ரசிகர்களை திருப்தி படுத்தலாம் என்று முயற்சி செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலரும் அதிருப்தியில் இருந்த நிலையில் இந்த செய்தி ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் விரைவில் ப்ரோமோ வெளியாக வேண்டும் என்பது பலருடைய விருப்பம். ப்ரோமோ வந்தால் மட்டும்தான் இதை உறுதிப்படுத்த முடியும்... என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications