குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்.. ரிவியூவர் முதல் இத்தனை பிரபலங்களா? செம சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதில் தொகுப்பாளர் பிரியங்கா முதல் யூடியூப்பர் மற்றும் ரிவியூவராக இருக்கும் இர்ஃபான் வரை பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வழக்கமாக கலந்து கொள்ளும் பல கோமாளிகள் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது அதே நேரத்தில் பாலா இந்த சீசனிலும் இல்லையாம். அதுபோல இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்து கொள்ள பல துறைகளில் இருந்தவர்களிடமிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதிலிருந்து ஒரு சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா: இசையமைப்பாளர் தேவாவின் மகனாகவும் தமிழ் சினிமாவில் சுமார் 100 படங்களில் இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பாடலோடு சேர்ந்து அதிகமான கண்டெண்டும் கிடைக்கும் என்பதால் இவரை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.
வசந்த்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வசந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் சீசனில் இருந்து விக்ரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.

திவ்யா துரைசாமி: நடிகை திவ்யா துரைசாமி ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அதனாலேயே இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் வி. டி. வி கணேஷ்: அந்த வகையில் நடிகர் சிம்புவின் நண்பராகவும், தயாரிப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் இருக்கும் விடிவி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நிலையில் இவருக்கு இந்த வாய்ப்பு சிம்பு மூலம் கொடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் இருந்து ஒரு சிலர் ஒவ்வொரு முறையும் கலந்து கொண்டு வருகிறார்கள். கடந்த பிக்பாஸில் கூட கூல் சுரேஷ் கலந்து கொண்டு இருந்தார். அதுபோல இவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இர்ஃபான்: யூடியூப்பராகவும் உணவை ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டே பிரபலமான யூடியூப்பர் இர்ஃபான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே இவர் குறித்து அதிகமான விமர்சனங்கள் கிளம்பி வருவது வழக்கம்தான். இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இணையத்தில் அதிகமாக பேசப்படும் என்றும் முடிவு எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரியங்கா தேஷ் பாண்டே: அதுபோல பிரியங்கா விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் குக்காக இந்த முறை களமிறங்க போகிறார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலம் அடைந்தது போல குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனிலும் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
அதுபோல சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தினேஷ் மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது போல புதுச்சேரியில் இயற்கை விவசாயம் செய்து வரும் பிரான்ஸ்காரரான கிருஷ்ணா மெக்கன்சி என்பவரிடமும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம்.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் சீனியர் நடிகர் நடிகைகள் யாராவது கலந்து கொள்வார்கள். அந்த வரிசையில் இந்த முறை அம்பிகா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம்தான். அதில் அடிப்படும் பெயர்களில் இருப்பவர்கள் தான் அதிகமாக அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த முறை மேலே கூறியவர்களுடைய பெயர்கள் அடிபடுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications