CWC இல் மணிமேகலைக்கு நடந்த அவமானம்! தொகுப்பாளராகியும் இந்த நிலைமையா? தாமு வேற இப்படி சொல்லிட்டாரு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூன் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை மீண்டும் கோமாளியாக மாற்றப்பட்டு இருக்கிறார்.
டிவி சேனல்கள் மற்ற சேனல்களை விடவும் டிஆர்பியை கூட்டுவதற்காக புதிய புதியதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் அதிகமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பிறமொழி சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது அதிகமான தமிழ் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாகவே இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளும் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக மக்கள் மத்தியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டது. இதுவரைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மெஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறியதும் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் வெளியேறிவிட்டார்.
ஆனாலும் விஜய் டிவி தொடர்ச்சியாக ஐந்தாவது சீசனை புது கூட்டணியோடு ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கிறது. அதில் வழக்கம் போல இந்த முறையும் கலகலப்பான போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தாமு உடன் மாதம் பட்டி ரங்கராஜன் நடுவராக நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு டுவிஸ்ட் வரும் வாரத்தில் நடைபெற இருக்கிறது.
அதாவது வரும் வார எபிசோட்டில் இரண்டு நடுவர்களும் இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் போல போட்டியிடப் போகிறார்கள். இதுவரைக்கும் போட்டியாளர்கள் சமைத்து பார்த்த ரசிகர்களுக்கு முதல் முறையாக இரண்டு செஃப்களும் சமைக்கப் போவதை பார்க்கப் போகிறார்கள். அதுபோல கோமாளியாக இருந்து தொகுப்பாளராக மாறிய மணிமேகலை இந்த வாரம் மீண்டும் கோமாளியாக மாறி இருக்கிறார்.
இந்தப் ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் மணிமேகலைக்கு ஏன் இந்த அவமானம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு மணிமேகலையை கோமாளியாக செஃப் தாமுதான் மாற்றி இருக்கிறார். அதனால் சில ரசிகர்கள் தாமு எடுத்த முடிவு தவறு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications