CWC 5: நடிகர் VTV கணேசனை தாக்கிய நடிகை ராதா.. நடிகை அம்பிகாவை பற்றி சொன்ன வார்த்தையால் வந்த வினை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வரும் மே 18 மற்றும் 19ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ராதா போட்டியாளராக இருக்கும் விடிவி கணேசனை திடீரென்று தாக்கியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 3 வாரங்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு சிக்கன் சமைக்க டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கோமாளிகள் தமிழ் சினிமாவின் வில்லி மற்றும் வில்லன் கெட்டப்பில் வந்திருக்கின்றனர்.

இந்த வாரம் சிக்கன் சமைக்கும் வாரம் என்பதால் கோழி முட்டையில் போட்டியாளர்களுக்கு ஜோடியாக இருக்கும் கோமாளிகளின் பெயர் இருப்பது போன்றும் அந்த முட்டையை உடைத்ததும் அதில் இருக்கும் கோமாளியை போட்டியாளர் தனக்காக இந்த வாரம் சமையல் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகை ராதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
நடிகை ராதா பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்போது அவரிடம் விடிவி கணேஷ் செய்த கலாட்டா தான் தற்போது ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது. அதில் ராதாவை பார்த்ததும் விடிவி கணேஷ், எங்க அம்மா கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணுன்னு ஒரே தொந்தரவு பண்ணுனாங்க.
அப்போ எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டாங்க நானும் இந்த மாதிரி தான் பொண்ணு வேணும்னு ராதா உடைய போட்டோவை தூக்கி காட்டுனேன். பிறகு அவங்க திருவனந்தபுரத்தில் ஒரு பொண்ண புடிச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என்று சொல்லி புகழை பிடித்து கட்டி அழுகிறார். பிறகு எனக்கு ராதா அம்மா கிடைக்காம அம்பிகா அம்மா கிடைச்சிட்டாங்க என்று சொன்னதும் ராதா கோபமாகி ஓடி வந்து விடிவி கணேஷ் முதுகில் ஓங்கி குத்துகிறார்.
எங்க அக்கா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு சோகமா? என்று அவர் கேட்க அதற்கு விடிவி கணேசன் நீங்க கிடைக்கலையே என்ற சோகம் தான் என்று சொன்னதும் ராதா கணேஷ் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தம் கொடுத்ததும் அவர் ஜர்க் ஆகி கீழே விழுகிறார். இப்படியாக கலகலப்பான ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அதோடு இந்த சீசனில் விடிவி கணேசன் குக்காக இருந்தாலும் அதிகமாக காமெடி செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்காகவே இந்த ஷோ பார்க்கலாம் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த சீசனில் யார் அதிகமாக என்டர்டைன்மெண்ட் பண்ணுறாங்க? யார் அதிகமா கிரன்ச் பண்ணுறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க... அதை கமெண்டில் சொல்லுங்க பார்ப்போம்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications