CWC5: என்ன கண்றாவி இது? இது சமையல் ஷோவா? பிட்டு படமா? கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மே ஐந்தாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வார நிகழ்ச்சியில் சட்டை போடாமல் தான் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டிலை முதுகில் எழுதிய படி புகழ் வந்திருக்கிறார். அவரோடு கோமாளியாக இருக்கும் அன்ஷிகா டான்ஸ் ஆடி இருக்கிறார். இது குறித்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது‌. இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று தான் விலகி இருக்கிறேன் என்று கூறியிருந்தார் அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர்.

Cook with comali Season 5 may 5th promo fans rosted Anshitha and pugazh

இதனால் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு செஃப் தாமு உடன் சேர்ந்து மாதம் பட்டி ரங்கராஜன் புதிய நடுவராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது கடந்த மார்ச் 27ஆம் தேதியில் இருந்து நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது.

இப்படியான நிகழ்ச்சி நிலையில் இந்த வாரம் இரண்டாவது வார நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் கடல் உணவுகள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் எல்லோரும் மீனை வைத்து சமையல் செய்கின்றனர். அதே நேரத்தில் இந்த வாரத்தில் கோமாளிகளுக்கு 80ஸ் திரைப்பட நடிகர், நடிகைகளின் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கோமாளியாக இருக்கும் அன்ஷிகா முதல் மரியாதை திரைப்படத்தில் ராதாவின் கெட்டப் போட்டு வந்திருக்கிறார்.

Cook with comali Season 5 may 5th promo fans rosted Anshitha and pugazh

அதுபோல புகழ் சட்டை போடாமல் தான் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் மற்றும் புலி படத்தை முதுகில் வரைந்து வைத்திருக்கிறார். அதோடு அன்ஷிதா மற்றும் புகழ் இருவரும் டூயட் பாடி இருக்கின்றனர். அதைப் பார்த்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்க்கிறார்கள்.

இதுதான் ரசிகர்களின் சோகத்தை போக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் போட்டு இருக்கும் டிரஸ் மற்றும் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் பார்க்கும் போது குழந்தைகளோடு பார்க்கும் வகையில் இருக்கவில்லை. இது பிட்டு படம் போல இருக்கிறது என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

Cook with comali Season 5 may 5th promo fans rosted Anshitha and pugazh

இன்னும் ஒரு சிலர் ஏற்கனவே நடிகை அன்ஷிகா செல்லமா சீரியலில் நடிக்கும் போது சீரியல் நடிகர் அர்னாவ் உடன் இவர் நெருக்கமாக இருப்பதால் அர்னாவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த வருடத்தில் பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது.

Cook with comali Season 5 may 5th promo fans rosted Anshitha and pugazh

இந்த நிலையில் அன்ஷிதா இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சக போட்டியாளர்களோடு பேசுவதை வைத்தும் இணையத்தில் பலர் திட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+