CWCயில் நடந்த மாற்றம்.. இது என்ன புதுசா இருக்கு? இனிமே இப்படித்தானா? லோகேஷ் கனகராஜ் போட்டியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விக்ரம் 2 திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை வைத்து இந்த வார எபிசோடின் டாஸ்கை உடைத்திருக்கிறார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வரிசையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்டது.

காரணம் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே இதில் இதுவரைக்கும் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் விலகி இருந்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான்கு சீசன்களாக தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவியில் இருந்து விலகி இருந்தது. இந்த நிலையில் புதிய கூட்டணியில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து பல புதுமையான டாஸ்க்குகள் மற்றும் போட்டியாளர்கள் என நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக பல மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்தில் இதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த அறந்தாங்கி நிஷா மீண்டும் கோமாளியாக களம் இறங்கி இருந்தார்.
அதுபோல வரும் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் 2 திரைப்படத்தில் இடம் இடம்பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூபர் பேசிய கிளிப்ஸ்களை இந்த வார ப்ரோமோவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதோடு இந்த வாரத்தில் பிரியாணி ஸ்பெஷல் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
9 டேபிளிலும் ஒன்பது வகையான பிரியாணி இருக்கப் போகிறது அதை டேஸ்ட் பார்க்க மக்கள் ரெடியா? என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் ப்ரோமோவில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் இப்போது சன் டிவியில் விஜய் டிவிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியோடு டிஆர்பியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான போட்டி இருக்கும் நிலையில் தங்களுடைய டிஆர்பி தக்க வைத்துக் கொள்வதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல முயற்சி எடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் கவரப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications