CWC 5: போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதுவும் யாருக்கு அதிகம் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் சீசனில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் முடிவடைந்தது. ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததுமே வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை சில மாதங்கள் நிகழ்ச்சி தொடங்காமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடேஷ் பட் நான் இந்த சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து இயக்குனர் தயாரிப்பாளர் என்று விலகி இருந்தனர். ஆனாலும் சில மாதங்கள் கழித்து புது கூட்டணியோடு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்ததும் இதில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதோடு தனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனை இல்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்கும் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எந்த நிகழ்ச்சியிலும் தான் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இப்படியான நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள விவரம் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்த நடிகை சுஜிதா மற்றும் விஜே பிரியங்கா தேஷ் பாண்டே இருவரும் தான் இந்த சீசனில் அதிகமான சம்பளம் வாங்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் ஒரு எபிசோடுக்கு 18000 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடிகர் விவிடி கணேஷ் மற்றும் இர்பான் இருவருக்கும் 15 ஆயிரம் வழங்கப்படுகிறதாம்.
அதுபோல செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக மாறிய நடிகை திவ்யா துரைசாமிக்கு 12 ஆயிரம் ரூபாய் என்றும், ஜீ தமிழ் சீரியல் நடிகர் அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின் நடிகர் வசந்த் வசி ஆகியோருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.
அது போல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பூஜா வெங்கட்க்கு 9 ஆயிரம் ரூபாயும், நடிகை ஷாலினி சோயாவிற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் சேனல் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications