திடீர் சர்ப்ரைஸ்.. திருமண கோலத்தில் ஜோயா.. வெட்கத்தோடு சொன்ன வார்த்தை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஷாலின் ஜோயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதோடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளர் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது இருந்த வரவேற்பு இப்போது குறைய தொடங்கி இருந்தாலும் ஒரு சில போட்டியாளருக்கு மட்டும் இந்த நிகழ்ச்சியில் அமோகமான வரவேற்பு கிடைக்கிறது. அவர்களுக்கு ஃபேன்ஸ் பேஜ்களும் அதிகரித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐந்தாவது சீசனில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களின் ஒருவராக ஷாலின் ஜோயா இருந்து வருகிறார்.

ரசிகர்களின் ஆதரவினால் இவர் ஒவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று கூட கூறப்படுகிறது. ஜோயா கோமாளிகள் போல சமையல் செய்யும்போது திணறிக்கொண்டு இருந்தாலும் கடைசியில் சமையலில் அசத்தி விடுகிறார். நடுவர்கள் கூட ஆஹா ஓகோ என்று புகழ்ந்து விடுகிறார்கள். இது என்ன மாயம் மந்திரம் என்பது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஆனால் இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் மற்றும் ஜாலியான பேச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஷாலின் ஜோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பே ஒரு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியிருக்கிறார். அதுபோல கண்ணகி உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இத்தனை திறமைகள் இருந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போலவே இவர் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் விதம்தான் பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஷாலின் ஜோயல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் மணப்பெண் உடையில் ஜோயா எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் என்னது இவருக்கு திருமணமா என்று அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஜோயா விளக்கத்தையும் கொடுத்து இருக்கிறார். "நண்பர்களே இது நான் நித்தின் சேட்டன் இயக்கும் நரேந்திரன் ஹனிமூன் என்ற சீரியஸில் கோமியோ ரோலில் நடிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஜோயா சர்ச்சைகளுக்கு பெயர் போன டிடிஎப் வாசன் காதலி என்று பலரும் சொல்லிக் கொண்டு வந்தாலும் இருவரும் நாங்கள் காதலிக்கிறோம் என்பதை வெளிப்படையாக இதுவரைக்கும் சொல்லவில்லை. ஆனால் அதிகமான ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த ஜோயாவின் கேப்ஷனை படித்துப் பார்க்காத சில ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணமா? டிடிஎஃப் வாசன் இது பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications