CWC-யில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. கண்கலங்கி கடைசியில் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். யார் அவர் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் இந்த சேனலில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதிலும் அதிகமானோர் சின்னத்திரை பிரபலங்களாகவே இருக்கின்றனர். ரசிகர்களுக்கு நன்கு பிரபலமான பல போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்த வசந்த் வசி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்றதுமே பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் இவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வந்தனர்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தொடங்கப்பட்ட பிறகு இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்ட் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு இந்த வாரத்தில் பிரியாணி
செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களும் ஆர்வத்தோடு இருந்தனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியாணி டாஸ்க்கில் சரியாக சமைக்காத அக்ஷய் கமல், பூஜா மற்றும் வசந்த் வசி ஆகியோர் எலிமினேஷன் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர். அதில் வசந்த் வசி சரியாக சமைக்கவில்லை என்று செஃப் தாமு அவரை எலிமினேட் செய்திருந்தார். அப்போது அவர் கண்கலங்க சில வார்த்தைகளை பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவிற்கு பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
அதில் வசந்த் வசி பேசுகையில் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல சீசன்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும். அதனால் இந்த நிகழ்ச்சியில் நான் நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்வேன் என்று நினைத்தேன் ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் எனக்காக பலர் ஹார்ட் வொர்க் செய்து இருக்கிறார்கள்.
என்னோடு கோமாளியாக இருந்தவர்கள் என்னை வெற்றியடைய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள், இந்த நிகழ்ச்சிக்கு வந்து எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வசந்த் வசி கண்கலங்கி அழுதுவிட்டார். அப்போது புகழ் உட்பட கோமாளிகள் எல்லோரும் இதற்கெல்லாம் கவலைப்படாத இனி வைல்ட் கார்ட் சீக்கிரமா வரப்போகுது அதில் வந்துரு என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications