குக் வித் கோமாளி 5: TTF வாசனின் காதலி இனி விஜய் டிவியிலா? அப்போ என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சம் இல்லை
சென்னை: டிடிஎஃப் வாசன் யூடியூப்பராகவும் திரைப்பட நடிகராகவும் இருக்கும் நிலையில் அவருடைய காதலி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய செய்திகள் சமீபத்தில் ரசிகர்களின் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்குமா? இல்லையா? என்ற குழப்பத்திலேயே இருந்த நிலையில் இப்போது அது குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இப்போ வரைக்கும் எப்போது நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்ற செய்திகள் மட்டும் இன்னும் உறுதியாக சேனல் தரப்பில் இருந்து கூறப்படவில்லை. ஆனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கான சூட்டிங் தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசன் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் செஃப் தாமுவோடு களம் இறங்கி இருக்கிறார்.
அதேபோல இந்த சீசனில் புதிய குக்காக யூடியூபர் இர்பான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா, நடிகர் வசந்த் போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று செய்திகள் பரவி வருகிறது. அதுபோல கோமாளிகளாக பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரோஸி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், கூல் சுரேஷ் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஷமி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் இன்று வெளியான தகவல்களில், யூடியூபராகவும் பைக் ரேஸ்ராகவும் இருக்கும் டிடிஎஃப் வாசன் காதலியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. அதாவது கேரளாவை சேர்ந்த நடிகை ஷாலின் தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்த நிலையில் இவர் டிடிஎஃப் வாசனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் சேர்ந்து அதிகமான வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இவரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஷாலின் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு உத்தேசப்பட்டியல் வெளியாகும். அதில் இடம்பிடிக்கும் போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வாடிக்கை தான் அந்த மாதிரி தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications