குக் வித் கோமாளி எவிக்ஷனில் நடந்தது இதுதான்..! வெளியே தெரியாது.. ரகசியங்களை உடைத்த வசந்த் வசி
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடிகர் வசந்த் எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தன்னுடைய எலிமினேஷன் குறித்து தன் வருத்தத்தை முதல் முறையாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பெரும் பிரச்சனைக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களை கடந்துவிட்ட நிலையில் இரண்டாவது எலிமினேஷன் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அதில் வசந்த் வசி எலிமினேஷன் செய்யப்பட்டார். இது இணையத்தில் பல ரசிகர்களின் அதிர்ச்சிகளை பெற்று வருகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அன்பேர்(unfair ) எவக்சன் நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுபோல இப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் நடந்திருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் பிரியாணி டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் சரியாக சமைக்காத காரணத்தை சொல்லி நடிகர் அக்ஷய் குமார், பூஜா மற்றும் வசந்த் வசி மூவரும் டேஞ்சர் ஷோனுக்கு அனுப்பப்பட்டனர். அதில் அவர்களுக்கு கொடுத்த டாஸ்க்கில் வசந்த் வசி சரியாக சமைக்கவில்லை என்று சொல்லி அவர் எலிமினேஷன் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சரியாக சமைக்க தெரியாத ஜோயா ஒவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே சமைக்க தெரிந்த வசந்த் வசி வெளியேற்றப்பட்டு விட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வசந்த் வசி இதுகுறித்து பேட்டியில் பேசுகையில் எனக்கும் இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. என்னுடைய குடும்பம் அடிமட்ட மிடில் கிளாஸ் குடும்பம் தான். வெளியே பார்க்கறதுக்கு தான் நான் ரிச் போல தெரியும். ஆனால் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு மேலே வந்த குடும்பம் தான்.
சின்ன வயசிலிருந்து ரொம்ப ஆசைப்பட்டு இருக்கேன் எதுவுமே கிடைக்காது. சின்ன வயதில் சைக்கிள், அதற்குப் பிறகு பைக் என்று அந்தந்த ஸ்டேஜில் எல்லா குழந்தைகளும் என்ன ஆசைப்படுவார்களோ அதுபோல நானும் ஆசைப்பட்டேன் ஆனால் எதுவும் கிடைக்காது. கிடைக்கவில்லையே என்று அதிக நாட்கள் அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க மாட்டேன். அடுத்து என்ன நடக்கணுமோ அதை நோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.
அது போல் தான் இப்போது எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எவிக்ஷன் கூட தோன்றுகிறது. ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் நாம் இதில் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. அதனால் கடந்து போகத்தான் நினைக்கிறேன். ஏற்கனவே எனக்கு சமைக்க தெரியும். எங்க வீட்டில் நான் நன்றாக சமைக்கிறேன் என்று எல்லோரும் சொல்லுவாங்க. நான் சமைக்கிறதை எங்க அக்கா ரொம்பவும் விரும்பி சாப்பிடுவாங்க.
அம்மா அழகாக சமைப்பாங்க அதை ரசிச்சு சாப்பிட ஆரம்பித்தேன். ரசித்து சாப்பிட்டதால் அதை விரும்பி சமைக்கவும் தொடங்கி விட்டேன். அதனால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஒவ்வொரு சீசனிலும் முயற்சி செய்தேன். இப்போது கிடைத்தது ஆனால் அது புஸ்ஸுன்னு போய்விட்டது என்று அந்த பேட்டியில் வசந்த் வசி பேசியிருக்கிறார். இந்த பேட்டிக்கு கீழே கமெண்ட் செக்ஷனில் அதிகமான ரசிகர்கள் இது unfair எவிக்ஷன் என்று வசந்த் வசிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications