CWC 5: நாஞ்சில் விஜயன் வெளியேற காரணம்? கோமாளிகளுக்குள் சலசலப்பு! அந்த நடிகைக்கு ஸ்பெஷல் சலுகையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் கோமாளியாக அறிமுகமான நாஞ்சில் விஜயன் திடீரென்று தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போறேன் என்று அறிவித்திருந்தார். அதுபோல பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருக்கும் சில கோமாளிகளுக்குள் மனஸ்தாபம் இருப்பதாகவும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

Cook with comali Season 5 why reason of Nanjill Vijayan to quit show

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே இந்த சீசனிலிருந்து வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இயக்குனர் தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி புது கூட்டணியோடு தொடங்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே இந்த சீசனில் அதிகமான கோமாளிகளும் புது குக்குகளும் அறிமுகமாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவு அடைந்ததும் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாஞ்சில் விஜயன் தான் வெளியேறப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதில், "எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி (குக் வித் கோமாளி நிகழ்ச்சியை) தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதை பார்த்ததும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்குள் ஏதோ நடக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே வெங்கடேஷ், பட் தாமு கூட்டணியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் இனி மாதம் பட்டி ரங்கராஜன் மற்றும் தாமு கூட்டணியில் ரசிப்பார்களா? என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிற நிலையில் தயாரிப்பு தரப்புக்கும், போட்டியாளர்கள் சிலருக்கும் இடையே கம்யூனிகேஷனில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாஞ்சில் விஜயின் விஷயத்திலும் மிஸ் கம்யூனிகேஷன் காரணமாகத்தான் அவர் வெளியேறி இருக்கிறார் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கோமாளிகளை கூப்பிடும் போது நிகழ்ச்சி முழுக்க நீங்க வருவீங்க என்றுதான் கூப்பிட்டு இருக்காங்க. ஆனா முதல் எபிசோடு சூட்டிங் போன பிறகு தான் சில போட்டியாளர்களுக்கு நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று உண்மை தெரிய வந்திருக்கிறது.

காரணம் ஒருவரிடம் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்திருக்கும் பலரிடமும் நீங்கள் நிகழ்ச்சி முழுக்க வருவீர்கள் என்று தான் சொல்லி கூப்பிட்டு இருக்கிறார்களாம். அதே நேரத்தில் இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு இங்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் வருத்தப்படுகிறார்கள். பழைய கோமாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் தான் புது கோமாளிகளை தேடுவதாகவும் அதனால் சில கோமாளிகளுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி முழுக்க வருவீங்க என்று சொல்லி எங்களை கூப்பிட்டுக்கொண்டு நிகழ்ச்சியில் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என்று சில கோமாளிகள் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்காத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் நாஞ்சில் விஜயனும் கோபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டு இருக்கிறார். பிறகு சிலர் தொடர்பு கொண்டு பேசியதால் அந்த பதிவை நீக்கிவிட்டாராம். ஆனாலும் அவர் வருத்தத்தில் தான் இருக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள்.

நாஞ்சில் விஜயன் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் இன்னும் ஒரு சில கோமாளிகளும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பெரிய பிரச்சனை கிடையாது சூட்டிங் ஷெடியூலில் ஏற்படும் சின்ன பிரச்சனைதான் இது சரி செய்து விடலாம் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக பிரியங்காவிற்கும் அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரிக்கும் பாக்ஸ் ஆபீஸ் தயாரிக்கும் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதாவிற்கும் தனி முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சிலர் புலம்பி கொண்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது அதற்குள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தங்களுக்குள் இருக்கும் மன வருத்தத்தை சரி செய்து கொள்வார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+