நல்லாதானே போய்கிட்டு இருக்கு? அவசர அவசரமாக முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி சீசன் 5?
சென்னை: விஜய் டிவியில் பெருவாரியான ஆதரவை பெற்றுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒருவர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 4 சீசன்களில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமுவுடன் வெங்கடேஷ் பட் இருந்த வந்தார். ஆனால் 5ஆவது சீசனில் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கவில்லை.

இது குறித்து ஆரம்பத்தில் சலசலப்புகள் இருந்தன. அதாவது விஜய் டிவிக்கும் பட்டுக்கும் ஏதோ பிரச்சினை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெங்கடேஷ் பட்டே , ஏன் விஜய் டிவியில் இருந்து விலகினார் என்பதற்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருந்ததாவது: என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த நிறுவனமான என்டமால், விஜய் டிவியை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் நானும் வெளியேறிவிட்டேன். மற்றபடி விஜய் டிவியுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் யார் நடுவர் என்ற அடுத்த கேள்வி எழுந்தது.
அந்த வகையில் பட்டுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவரானார். இந்த நிகழ்ச்சியில் 10 பேர் கலந்து கொண்டனர். ஷாலின், அக்ஷய், திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, பூஜா வெங்கட், வசந்த் வாசி, இர்ஃபான், விடிவி கணேஷ், பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல் ஆகிய 4 பேர் அடுத்த வாரம் நடைபெறும் செமி பைனலுக்கு போட்டியிடுகிறார்கள். கடந்த வாரம் திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகிய இருவர் எலிமினிடேட் செய்யப்பட்டார்கள். வாரந்தோறும் ஒரு எலிமினேஷன் என சொல்லப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் ஏன் இருவர் என்ற கேள்வி எழுந்தது.

இதற்காக விரைவில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க போகிறதாம். இதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரைந்து முடிக்க அவசரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிலையில் 8ஆவது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி, "இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்க போவதாக தெரிகிறது. இந்த சீசனில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் 2 அல்லது 3 பேர் வரை களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தான் புதுப்போட்டியாளர்கள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications