அது எப்படி! என் மதத்தின் பெயரில் கடை இருந்தா மட்டும்? கமெண்டுக்கு காரசார பதில் கொடுத்த இர்ஃபான்
சென்னை: யூடியூப்பர் இர்ஃபான் பல ஹோட்டல்களில் சாப்பாடு ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இர்ஃபான் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இப்போது மக்கள் மத்தியில் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் யூடியூப்பை நம்பித்தான் இருக்கின்றனர். இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் பல யூடியூப்பர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பலர் மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை எடுத்துக் கூறி பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர்.

சமையலில் தொடங்கி விமானம் செய்வது வரைக்கும் எல்லா விஷயங்களிலும் யூடியூபில் பலர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் வித்தியாசமாக தாங்கள் வாங்கும் பொருள்கள் தரம் எப்படி இருக்கிறது என்பதை ரிவியூ செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சாப்பாடு ரிவ்யூ செய்து பிரபலம் அடைந்த இர்ஃபானுக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் ஒவ்வொரு கடைகளிலும் சாப்பாடை ருசித்து சாப்பிட்டு ரிவ்யூ செல்லும் அழகை பார்ப்பதற்காகவே பலர் இவருக்கு பாலோவஸ்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் இர்ஃபான் வீடியோக்களில் அதிகமாக உணவை மோசமாக பேசி பார்க்க முடியாது. மிகவும் அரிதாகவே ஒரு சில உணவுகளை மோசமாக பேசி இருப்பார். அதே நேரத்தில் இவர் எல்லா ஹோட்டலுக்கும் பிரமோஷனுக்காக தான் செல்கிறார் என்ற பேச்சுக்களும் எழுந்தது. அதை இர்ஃபார் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் இர்ஃபான் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று ஏற்கனவே சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அதை இப்போது விஜய் டிவி உறுதிப்படுத்தி இருக்கிறது.
நாளை அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இப்படியான நிலையில் இர்ஃபான் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ரசிகர் ஒருவர் "இர்ஃபான் 99 சதவீதம் முஸ்லிம் கடைகளுக்கு மட்டும்தான் ப்ரோமோட் செய்கிறார். ஒரு சதவீதம் தான் இந்து கடைகளுக்கு ப்ரொமோட் செய்கிறார்" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த இர்ஃபான் "அது எப்படிடா என் மதத்தின் பெயரில் கடை இருந்தா மட்டும் அங்க வந்து இப்படி கமெண்ட் போடுற... நேத்து பண்ணுன "நீனா" அதற்கு முன்னாடி பண்ணுன "a2b" கடைசியா "மாப்பிள்ளை ரெஸ்டாரன்ட்" "பாலமோர் டிபன் கடை" என்று பல கடைகள் இருக்கு. அதையெல்லாம் பார்க்கும் போது நீ... (அதில் ஒரு கெட்ட வார்த்தையை இணைத்து இருக்கிறார்). பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மத வெறுப்போடு சாப்பிடுற உன்கிட்ட தான்டா இருக்கு சைக்கோ" என்று கடுமையாக பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications