யூடியூப்பர் இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்.. மனைவி கொடுத்த விளக்கம்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
சென்னை: யூடியூப் பிரபலம் இர்ஃபான்க்கு கடந்த வருடத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்று தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இர்பான் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா? என்று சில மாதங்களாகவே ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில் முதல் முறையாக இது குறித்து அதிகாரப்பூர்வமாக இர்ஃபான் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் youtube மூலம் பிரபலமடைந்த இர்ஃபானுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டு உணவுகள் வரை சாப்பிட்டு விமர்சனம் செய்வார். அதனாலயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. அதிலும் சாப்பிடும்போது இவர் கொடுக்கும் ரியாக்ஷன் அதிகமாக மீம்ஸ்களாக இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. சாப்பிட ஆசை இல்லாதவர்களையும் கூட இவருடைய ரியாக்ஷன் சாப்பிட ஆசை தூண்டிவிடும்.
அதே நேரத்தில் இர்ஃபான் youtube சேனல் முழுக்க முழுக்க உணவுக்கே பிரத்யேகமானது. தன்னுடைய கடின உழைப்பினால் தினமும் ஒரு வீடியோ பதிவு செய்து வரும் இர்ஃபான் வீடியோவிற்கு மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த வருடம் தான் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இர்ஃபான் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஆலியா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரம்ஜான் அன்று அவர் சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் "நாம் மற்றும் நாங்கள்" என்று கூறி மனைவியுடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் "ஒருவேளை இருக்குமோ..?" என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய வாரிசு குறித்து ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இர்ஃபான் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நீங்கள் எல்லோருமே கெஸ் பண்ணி கொண்டு இருந்தது உண்மைதான். என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இப்போது 7 மாதம் முடிவடைந்து எட்டாவது மாதத்தில் இருக்கிறார். சில மாதங்களாகவே ரசிகர்கள் "அண்ணா அண்ணி கர்ப்பமாக இருக்கிறாரா..?" என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் மறைக்க வேண்டும் என்று சொல்லாமல் இருக்கவில்லை.
சில மாதங்கள் போன பிறகு சொல்லலாம் என்று இருந்தோம் என்று விளக்கமும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இர்ஃபான் மற்றும் அவருடைய மனைவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இத்தனை நாட்களாக தன்னுடைய வீடியோவில் சாப்பாட்டுக்களை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வந்த இர்ஃபான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களம் இறங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications