CWC 6 contestants list: லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் கஞ்சா கருப்பு வரை.. யாரெல்லாம் இருக்குறாங்க பாருங்க
சென்னை: விஜய் டிவியில் அடுத்த வாரம் மே எட்டாம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் நடிகையும் தொகுப்பாளினியுமான லட்சுமி ராமகிருஷ்ணன், சீரியல் நடிகை ஷபானா உட்பட பத்து போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரெல்லாம் என்று விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ஐந்தாவது சீசன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து இப்போது ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. வரும் எட்டாம் தேதி இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு நடுவர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது மூன்றாவதாக செஃப் கௌஷிக் கலந்து கொள்கிறார்.

புது கோமாளிகள்
அதுபோல இந்த சீசனில் புது கோமாளிகளும் அறிமுகமாகி இருக்கிறார்கள். அதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அதற்காக முதல் ப்ரோமோ வெளியானது. அதில் நான்கு போட்டியாளர்கள் யாரெல்லாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சீசன் 6 குக்குகள்
அதன்படி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், சீரியல் நடிகை ஷபானா மற்றும் அமரன் திரைப்படத்தில் நடித்திருந்த உமர் லத்திப் ஆகியோர் கலந்து கொள்வதாக உறுதி செய்யப்பட்டது. இவர்களை தொடர்ந்து நேற்று இரவு வெளியான ப்ரோமோவில் மீதமுள்ள ஆறு போட்டியாளர்களின் விவரம் வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி 6 போட்டியாளர்கள்
அதன்படி பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான மதுமிதா கலந்து கொள்ள இருக்கிறார். அவரை போல நடிகர் கஞ்சா கருப்பு, யூடியூப் பிரபலம் சௌந்தர்யா, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் விவசாயியான நந்தகுமார் மற்றும் யூடியுப் பிரபலமான சுந்தரி போன்றோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சீசனில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்களை களமிறக்கியிருக்கிறார்கள்.
சம்பவம் இருக்கு
ஏற்கனவே கோமாளியாக சுர்ஜித் என்ற youtuber அறிமுகமாகி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து இப்போது குக்காகவும் இரண்டு யூடயூபர்கள் கலந்து கொள்கிறார்கள். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மாமியாராக நடித்து வந்த பிரியா ராமனும் அவருக்கு மருமகளாக நடித்து வந்த ஷபானாவும் ஜோடியாக இருக்கிறார்கள். இது போதாது என்று சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் குக்காக கலந்து கொள்ளப் போகிறார் அவரை விஜய் டிவியில் ட்ரோல் செய்த ராமர் கோமாளியாக கலந்து கொள்கிறார். இதனால் இந்த நிகழ்ச்சி காமெடியாக போகிறதா? அல்லது சீரியஸாக போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications