குக் வித் கோமாளி 6: லீக்கான போட்டியாளர்களின் லிஸ்ட்.. வில்லி முதல் ஹீரோயின் வரை, இவங்க எல்லாம் வராங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் புதிய கோமாளிகள் கலந்து கொள்ளும் நிலையில் புதிய போட்டியாளர்களின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்படும் போது அதிகமான விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அதிகமான ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சி தான் ஸ்ட்ரெஸ் ப்ரீ நிகழ்ச்சி என்று பலர் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

Vijay TV Cook With Comali

வெங்கடேஷ் பட் விலகல்

இந்த நிகழ்ச்சியில் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நான்கு சீசன்களாக இருந்து வந்தனர். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. அதுவரைக்கும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான்கு சீசன்களாக தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் அதிரடியாக வெளியேறியது.

ஐந்தாவது சீசன் பிரச்சனை

அதுபோல இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்தவர்களும் சிலர் வெளியேறி இருந்தனர். செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக மாறிவிட்டார். விஜய் டிவி பிரபலங்கள் பலர் சன் டிவிக்கு மாறிவிட்டார்கள். இதனால் ஐந்தாவது சீசன் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் மாதம்பட்டி ரங்கராஜன் உடன் தாமு இந்த இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார்.

புதிய கோமாளிகள்

ஆரம்பத்தில் நிகழ்ச்சி நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அதற்கு பிரியங்கா தான் காரணம் என்று பெரிய குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது அந்த நேரத்தில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனாலயே பைனல் நிகழ்ச்சி பெரிய அளவில் சுவாரசியம் இல்லாமல் முடிந்துவிட்டது.

Vijay TV Cook With Comali

புதிய நடுவர்

இந்த நிலையில் இப்போது ஆறாவது சீசன் தொடங்க போகிறது. இந்த நிகழ்ச்சியில் பல கோமாளிகளை புதியதாக இறக்கி இருக்கிறார்கள் அதில் இன்ஸ்ட்டா பிரபலமான சுர்ஜின், பிக் பாஸ் சௌந்தர்யா, பாடகர் பூவையார் போன்றோரும் இடம் பிடித்திருக்கிறார்கள். அதுபோல தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் கௌஷிக் நடுவராக இணைந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குக்குகள் லிஸ்ட்

அதில் நடிகர் சஞ்சீவ் மனைவியான நடிகை ப்ரீத்தி கலந்து கொள்ள இருக்கிறாராம். ப்ரீத்தி தன்னுடைய யூடியூப் சேனலிலேயே அதிகமான சமையல் வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதுபோல சீரியல் நடிகரும் பிக் பாஸ் பிரபலமான தீபக்கும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறாராம். கடந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்த சுஜிதா கலந்து கொண்டார், அவரை போல இந்த சீசனில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி 6 போட்டியாளர்கள்

அதுபோல நடிகை வடிவுக்கரசி மற்றும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மதுமிதா வரப்போகிறாராம். அது போல சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஷபானா ஷாஜகான் உட்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+