குக் வித் கோமாளியில் என்ட்ரியாகும் டிக் டாக் பிரபலம்.. இனி காமெடிக்கு பஞ்சம் இல்லை! புகழுக்குத்தான் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 6 இன் நிகழ்ச்சியில் கோமாளியாக டிக் டாக் பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பிரபலம் யார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆனால் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் சீசனே பெரிய அளவில் ஹிட்டடித்து விட்டது.

புகழுக்கு பிரபலம்
இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பார்த்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பலருக்கு இப்போது சினிமா வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. அதில் புகழ் சிவாங்கி உட்பட பலரை சொல்லலாம். புகழ் விஜய் டிவியில் ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய இயல்பான காமெடியால் கிடைத்தது.

குக் வித் கோமாளி பிரபலம்
முதல் சீசனிலே அதிகமாக ரசிகர்கள் கிடைத்து விட்டனர். அதற்கு பிறகு இப்போது சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சிவாங்கி விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் போட்டியளராக கலந்து கொண்டார்.. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டாலும் ஒவ்வொரு வாரமும் அவர் பாடும் பாடல்கள் ஹிட்டானது.
நடுவர் விலகல்
சிவாங்கியின் திறமை பலராலும் பாராட்டப்பட்டது. சிவாங்கியும் இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பரபரப்பு ஏற்படுத்தி விட்டது. அதுவரைக்கும் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். அவரை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவியை விட்டு விலகி விட்டது.

சர்ச்சைகள்
ஆனாலும் ஐந்தாவது சீசனில் புதிய நடுவராக மாதம் பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு கடைசி இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இனி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வராது என்று கூறப்பட்டது.
புது கோமாளிகள்
ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் இந்த சீசனில் வழக்கமான கோமாளிகளான புகழ், சுனிதா போன்ற பலர் கலந்து கொள்கிறார்கள். அவர்களோடு சௌந்தர்யா உட்பட சில புதுமுக கோமாளிகளும் கலந்து கொள்கிறார்கள்.
டிக் டாக் பிரபலம்
அதில் ஒருவர் தான் நடிகரும் டிக் டாக் பிரபலமான சர்ஜின். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஸ்டைல் தமிழில் பேசி சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். ஜி பி முத்து எப்படி திருநெல்வேலி தழில் பேசி பிரபலமானாரோ அதுபோல இவரும் சோசியல் மீடியாவில் பலருக்கும் தெரிந்தவராக இருக்கிறார். அதுபோல நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓம் காளி ஜெய் காளி என்ற வெப் சீரிஸில் வில்லனின் இளம் பருவ கேரக்டரில் இவர்தான் நடித்திருந்தார்.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிக் டாக் இன்ஸ்ட்டா பிரபலம் சர்ஜின் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் சுர்ஜின் பேசும் தழில் புரியாமல் புகழ் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீசனில் அதிகமான புது முகங்கள் இருக்கும் நிலையில் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications