CWC: குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் இவர் தானா! - இதுக்குத்தான் இத்தனை அலப்பறை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிறைந்த ஒரு கலக்கலான சமையல் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி வெற்றிகரமாக ஆறு சீசன்களை நிறைவு செய்ய உள்ளது. முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா, நான்காவது சீசனில் மைம் கோபி, ஐந்தாவது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே என ஒவ்வொரு சீசனிலும் ஒரு வெற்றியாளர் இருந்துள்ளனர். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், யார் டைட்டில் வின்னர் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

இறுதி போட்டியாளர்கள்
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தக்குமார், பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், ஷபானா, உமைர், ஜாங்கிரி மதுமிதா எனப் பலரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர்.
இவர்களில் முதல் ஆளாக பைனலுக்குள் அடியெடுத்து வைத்தவர் ஷபானா. அடுத்ததாக, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜு ஆகியோர் பைனலுக்குள் நுழைந்தனர். இறுதியாக நடந்த வைல்டு கார்டு சுற்றில் வெற்றி பெற்று உமைர் நான்காவது ஆளாக பைனலுக்குள் நுழைந்தார். இந்த நான்கு பேர் தான் இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் ராஜு தான் டைட்டில் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜு ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலையும் அவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சீசனில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் பரவியது. அதாவது ஷபானாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜன் ஓவராக சப்போர்ட் பண்ணுகிறார், மாதம்பட்டி ரங்கராஜன் ஷபானா என்ன சமைத்தாலும் அதை ஆஹா ஓஹோ என்று பாராட்டுகிறார் என்று சில விமர்சனங்கள் எழுந்தது. அதனால் அவர் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடைசியில் ராஜீக்கு டைட்டில் கொடுத்ததை சிலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications