குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, ஆரம்பத்திலிருந்து குடும்பம் முழுக்க சேர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய ஹிட் ஷோவாக இருந்து வருகிறது. சமையல், காமெடி, கலாட்டா-இந்த மூன்றும் கலந்த இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களை சிரிக்கவைத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. தற்போது ஏழாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இது குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

Cook With Comali Vijay TV Rakshan Roja

குக் வித் கோமாளி சர்ச்சை

ஆனா, கடந்த இரண்டு சீசன்களாக இந்த நிகழ்ச்சியும் சர்ச்சைகளைத் தவிர்க்க முடியாமல் போனது. குறிப்பாக, நிகழ்ச்சியின் முக்கியமான முகங்களில் ஒருவரான மணிமேகலை திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் மீதான ஹைப் கொஞ்சம் குறைந்தது என்பதும் உண்மை.

இந்த நிலையை மாற்றணும் என்பதற்காக தான், இப்போது 7வது சீசனில் முழுக்க புதிய முயற்சிகளோடு களமிறங்கியிருக்கிறது குழு. ஆனால் இப்போது எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் இங்கே இருந்த ரக்ஷன் இப்போது நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.

புது தொகுப்பாளராக ஜோயா இணைந்திருக்கிறார். கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவர், இப்போது தொகுப்பாளராக மாறியிருப்பது ஒரு புதுச்சுவை. அதே சமயம், தற்போது வெளியான ப்ரோமோவில் "ரக்ஷன் வரமாட்டாரா?" என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியதால், இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அதோடு புதியதாக யார் தொகுப்பாளராக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் மிக ஏற்பட வைத்திருக்கின்றனர்.

அடுத்த பெரிய மாற்றம் நடுவர்களில். ஆரம்பத்தில் இரண்டு செஃப்களோட தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இப்போது நான்கு பேராக மாறி இருக்கிறது. தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் சங்கர் ஆகியோருடன் நடிகை ரோஜா இணைந்திருப்பது இந்த சீசனின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. ரோஜா வருகை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Cook With Comali Vijay TV Rakshan Roja

குக் வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள்

ஆனா இந்த சீசனின் மிகப்பெரிய ட்விஸ்ட் போட்டியாளர்கள்தான். இதுவரை தனித்தனியாக வந்த குக்குகள், இந்த முறை ரியல் லைஃப் கணவன்-மனைவி ஜோடிகளாக களமிறங்க இருக்கிறார்கள். அதாவது சமையலுக்கு கூடுதலாக குடும்ப கலாட்டாவும் சேரும். அந்த வகையில் பாடகர் மனோ - ஜமீலா, அரவிந்த் - சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, சம்யுக்தா - அனிருத்தா போன்ற ஜோடிகள் பங்கேற்கிறார்கள்.

Cook With Comali Vijay TV Rakshan Roja

பரிதாபங்கள் டிராவிட்

இதோடு சேர்த்து இன்னொரு சர்ப்ரைஸ்-யூடியூப் உலகில் பெரிய வரவேற்பு பெற்ற பரிதாபங்கள் சேனல் மூலம் பிரபலமான டேவிட், தனது மனைவியுடன் இந்த சீசனில் போட்டியாளராக வருகிறார். குறிப்பாக, பெண் வேடத்தில் அவர் செய்யும் காமெடி ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த ஒன்று. சமீப காலமாக "டேவிட் எங்கே போயிட்டார்?" என்று ரசிகர்கள் தேடி வந்த நிலையில், இப்போது அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது.

இதனால், இந்த சீசனில் கலாட்டா லெவல் வேற லெவலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோமாளிகள் பக்கம் பார்த்தால், பழைய ஹிட் டீம் தான் மீண்டும் களம் இறங்குகிறது-புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை போன்றவர்கள் மீண்டும் சிரிக்க வைக்க வருகிறார்கள்.

மொத்தத்தில் பார்க்கும்போது, சர்ச்சைகள், மாற்றங்கள், புதிய முயற்சிகள்-இவையெல்லாம் சேர்ந்து இந்த 7வது சீசனுக்கு மீண்டும் ஹைப் உருவாக்கி இருக்கிறது. ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கும் இந்த சீசன், பழைய வெற்றியை மீண்டும் பிடிக்குமா என்ற கேள்விதான் இப்போது எல்லாருடைய கவனத்திலும் இருக்கிறது.

ஆனா இந்த முறை கான்செப்ட், போட்டியாளர்கள், புதிய முகங்கள் எல்லாம் பார்த்தா... "இந்த சீசன் மிஸ் பண்ணக்கூடாதே!" என்ற ஃபீலிங்கை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டது என்பது மட்டும் நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+