ஜோயா இத்தனை சீரியல்களில் நடித்திருக்கிறாரா? அதிலும் குழந்தையாக “அந்த” சீரியலில் கலக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஷாலின் ஜோயா தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதிலும் ஷாலின் சீரியல்களில் மட்டுமல்ல தொகுப்பாளராகவும் இருந்து இருக்கிறார். அது குறித்த தகவல்களை இப்போ பார்க்கலாம்.
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சீசன் வெற்றி பெற்று விட்டால் அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் விஜய் டிவியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரசிகர்கள் அதிகமானோரை கவர்ந்த போட்டியாளராக ஷாலின் ஜோயா இருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஒரு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியிருக்கிறார். ஒரு டான்ஸர் என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இது குறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஷாலின் ஜோயாவின் சொந்த ஊர் கேரளா தான். அது அவருடைய பேச்சு வழக்கைப் பார்த்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
ஷாலின் அப்பா பிசினஸ் மேனாக இருக்கும் நிலையில் அவருடைய அம்மா நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். அவர்தான் ஷாலின் ஜோயா நடிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தாராம். 2004 ஆம் ஆண்டில் தொடங்கி இப்ப வரைக்கும் ஷாலின் பல சினிமாக்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் சீரியலில் முதல் முதலில் சூர்யா டிவியில் 2004 ஆம் ஆண்டு "மிழிதுறக்கும் போல்" என்ற சீரியலில் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார்.
அதற்குப் பிறகு மாண்ட்ரேக் என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கிரண் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். அதிலும் குழந்தைகளுக்காக மட்டுமே என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ஷாலின் ஜோயா அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அமிர்தா டிவி, கைரளி டிவி, மலையில் மனோரமா என்ற மலையாள சேனல்களில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் 2016 ஆம் ஆண்டு அமிர்தா டிவியில் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்று ரியாலிட்டி நிகழ்ச்சியை ஷாலினி தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு சூர்யா டிவியில் ஒளிபரப்பான குடும்ப யோகம் என்ற சீரியலில் தான் நடித்த காட்சிகளை வீடியோவாக ஷாலின் ஜோயா வெளியிட்டு இருக்கும் நிலையில் இது பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. சீரியலில் மட்டுமல்லாமல் ஷார்ட் பிலிம்களிலும் வெப் சீரிஸ்களிலும் ஷாலின் ஜோயா நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான "நாகேந்திரனின் தேன்நிலவு" வெப் சீரிஸில் தான் நடித்த காட்சிகளின் புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்பு ஜோயா வெளியிட்டு இருந்தார். அதில் மணக்கோளத்தில் அவர் இருந்ததை பார்த்து பலரும் ஷாலினிக்கு திருமணமா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications