அடேங்கப்பா! தலை சுற்ற வைக்கும் வெங்கடேஷ் பட்டின் கிச்சன் பிசினஸ்.. இட்லி குண்டான் 6000, ஒரு கத்தி 995
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நடுவராக பிரபலம் அடைந்த வெங்கடேஷ் பட் புதியதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கடேஷ் பட் ஆன்லைன் கிச்சன். செட் பிசினஸ் துவங்கி இருக்கிறார் அதற்கு Vbdace என்று பெயர் வைத்திருக்கிறார்.
அதில் சமையலுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு இருக்கிறது. ஆனால் பொருள்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தன்னுடைய பொருள்களின் விலை எதற்காக அதிகமாக இருக்கிறது என்பது பற்றி வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் அந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார். இவர் இதற்கு முன்பு பல பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் வேலை பார்த்து இருக்கிறார். அதோடு வெங்கடேஷ் பட் அசைவம் சாப்பிடுவதில்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல் கொண்டு அனைத்து குறைகளையும் சொல்லி விடுவார்.
இந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக இவர் இருக்கும் நிலையில் தான் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கறாரான நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலப்பான ஒரு கேரக்டராக ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகளுக்கு பதிலடி கொடுப்பதிலும் சரி, குக்குகளின் திறமையை பாராட்டுவதிலும் சரி வெங்கடேஷ் பட் தாராளமாக நடந்து கொள்வார்.
அதுபோல கோமாளிகளை இவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார் என்று பலர் இவர் மீது குற்றச்சாட்டு வைத்தாலும் அது நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக செய்யப்படுவது என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் கூட விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தற்போதைய குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் புதியதாக ஒரு பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது இவர் ஆன்லைன் மூலம் கிச்சன் செட் பிசினஸ் துவங்கி இருக்கிறார். அதற்கு என்று பெயர் வைத்திருக்கிறார். அதில் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு இருக்கிறது. ஆனால் அதில் ஒரு இட்லி குண்டாவின் விலை 5595 ரூபாய் என்றும், பால் குக்கரின் விலை 2295 ரூபாய் என்றும், ஒரு கத்தியின் விலை 995 என்றும் ஆறு ஸ்பூன்கள் விலை ஆயிரம் ரூபாய் என்றும் போடப்பட்டிருக்கிறது.

இந்த பொருள்களின் விலையை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு வெங்கடேஷ் பட் இந்த ஒவ்வொரு பொருளிலும் அதற்கு தகுந்த பயன்பாடு இருக்கிறது. இதை வைத்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று விவரித்து பேசி இருக்கிறார். அதுபோல இந்த பொருட்களை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக பல இன்ஸ்டா பிரபலங்களை வைத்து தன்னுடைய கிச்சன் பிசினஸை வெங்கடேஷ் பட் விளம்பரம் செய்து வருகிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications