மலேசிய மக்களை குறிப்பிட்டு வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ.. நீங்களே இப்படி பண்ணலாமா பாஸ்?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடவடிக்கையை பற்றி விமர்சித்து மலேசியா பெண் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து அதிகமான ரசிகர்கள் வெங்கடேஷ் பட்க்கு ஆதரவு கூறி வந்தனர்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவு தத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வெங்கடேஷ் பட் வீடியோ வெளியிட தற்போது அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

நன்றி கூறி வெளியிட்ட வீடியோ
செஃப் வெங்கடேஷ் பட் சமீபத்தில் மலேசியாவில் இருந்து தனக்கு ஆதரவாக அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் நன்றி என்று கூறி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு ரசிகர்கள் அதுவெல்லாம் சரிதான் ஆனால் எப்படி நீங்கள் மலேசியா ரசிகர்களுக்கு மட்டும் நன்றி என்று கூற முடியும். நாங்களும் உங்களுடைய தீவிரமான ரசிகர்கள் தான் என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கிறோம். நாங்கள் அந்த மாநிலத்தில் இருக்கிறோம். எங்களுக்கும் ஹாய் சொல்லுங்கள், வணக்கம் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் அன்பு தொல்லை கொடுக்க, அனைவருக்கும் வெங்கடேஷ் பட் கூலாக நன்றி கூறி சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

கலகலப்பான நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் நடுவராக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தங்களுடைய போட்டியாளர்களிடம் சகஜமாக ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பர். அது நிகழ்ச்சிக்கு சுவாரசியமாக இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் அதாவது குக் மற்றும் கோமாளிகள் அனைவருமே ஒன்று சேர்ந்து கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர் என்று இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் பற்றி ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிறந்தநாள் பதிவு
வெங்கடேஷ் பட் சமீபத்தில் தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். தன்னுடைய பிறந்த நாளில் தன்னுடைய பேஸ்புக் பதிவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் தனது கேரியரை தொடங்கியதாகவும் சமீபத்தில் தன்னுடைய யூடியூப்பில் சேனல் இதயம் தொட்ட சமையல் தனக்கு சிறந்ததை வழங்கி வருவதாகவும் மேலும் மக்களின் வாழ்க்கையில் மதிப்பு சேர்க்கும் வாய்ப்பையும் கொடுத்ததாகவும் அதில் கூறியிருந்தார்.

ரசிகருக்கு பதில்
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவுக்கு ஒரு ரசிகர் தான் மலேசியாவில் இருப்பதாகவும் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியை நோக்கி நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் விதம் எரிச்சல் ஊட்டுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த செஃப் வெங்கடேஷ் பட்," இது ஒரு நிகழ்ச்சி என்றும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்" என்றும் அந்த ரசிகருக்கு பதில் அளித்து இருக்கிறார். தற்போது இந்த பதிலுக்கு அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது.

எழுத்தாளரும் கூட
வெங்கடேஷ் பட் ஒரு சமையல் கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். அவர் தன்னுடைய சமையல் கலைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவருடைய புத்தகங்கள் எளிமையாக மற்றும் அனைவரும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் சமையல் குறிப்பு உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல தொண்டு நிறுவனங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மற்றும் ஏழைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வழங்கியும் வருகிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications