CWCக்கு வந்த கிரிக்கெட் வீரர்கள்.. அதுவும் யாரு தெரியுமா? கேப்டன் கூட இப்படியா? வெளிவந்த ரகசியம்
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் 24 மற்றும் 25 ஜூன் 2023 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான வெங்கடேஷ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தங்கள் வீட்டில் நடப்பதும் தாங்கள் வெளியே போகும் இடத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பொதுவாக சிரிப்பு நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதன் காரணமாகவே ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் காமெடியாக கொண்டு போய் பலருடைய திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கின்றனர்.
குக் வித் கோமாளிக்கு என்று முதல் சீசனில் இருந்து அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல பல ரசிகர்கள் தங்களுடைய அனுபவங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம்தான். அந்த வகையில் ஒரு ரசிகர் தனக்கு குழந்தை இல்லாமல் இருந்த நேரத்தில் மன அழுத்தத்தில் அதிகமாக இருந்த பொழுது இந்த நிகழ்ச்சி அதிகமான ரிலீஃப் கொடுத்ததாகவும், அதற்குப் பிறகு தனக்கு குழந்தை பிறந்ததாகவும் கூட கூறியதாக வெங்கடேஷ் பட் தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்த்ததால் மன அழுத்தம் குறைந்ததாகவும் கூறி இருக்கின்றனர். அந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில நெகட்டிவ் கருத்துகளும் வருவது வழக்கம்தான். அதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் போட்டியாளர்கள் பலரையும் கம்பால் அடிக்கிறார்கள் என்று பலர் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.
அதுபோல இந்த நான்காவது சீசனில் இதுவரைக்கும் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி குக்காக மாறி இருப்பதும் ஆரம்பத்தில் இருந்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் மற்றும் வருண் சக்கரவர்த்தி கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒரு கிரிக்கெட் வீரர் நான் மத்திய பிரதேசத்தில் இருக்கிறேன். எங்க வீட்டில் எப்பவுமே கக் வித் கோமாளி பார்ப்போம். அதுவும் சீசன் இரண்டிலிருந்து ரெகுலரா பார்த்துகிட்டு வருகிறோம். சில நேரங்களில் ரிப்பீட்டில் கூட பார்த்திருக்கிறோம். இதுதான் நிஜத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ஃபேன்ஸ் இருக்காங்க. அதில் நாங்களும் இருக்கோம் என்று கூறி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இன்னொரு கிரிக்கெட் வீரர் நாங்க மேட்ச்க்கு போற டைம்ல கூட ஃபோன்ல எல்லாரும் சின்சியரா எதாவது பார்த்துகிட்டு இருக்காங்க. நாம ஏதாவது பேசலாம்னு போனா என்னுடைய கேப்டன் கூட அங்க குக் வித் கோமாளி பார்த்துட்டு இருக்காங்க என்று சொல்ல, அங்கே சிரிப்பலை அலைமோதுகிறது. தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications