குக் வித் கோமாளி செட்டில் நடப்பது இதுதான்..வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சிவாங்கி.. என்னென்ன பண்றாங்க?
குக் வித் கோமாளி செட்டில் தான் செய்த சேட்டையை சிவாங்கி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மனக்கவலை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் பார்த்து ரசிப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது செய்திருக்கும் செயல் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.

பாடலால் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சிவாங்கி அறிமுகமானார். இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பென்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடைய குரலுக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருடைய பாடல் திறமை வெளிச்சத்துக்கு வராத நிலையில் சிவாங்கிக்கு வேற லெவலில் பாப்புலர் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

ஜாலியான கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் தொடங்கி மூன்று சீசன்களாக சிவாங்கி கோமாளியாக கலந்து கொண்டு இருந்தார். அதுவும் அஸ்வினுடன் இவர் செய்யும் க்யூட்டான லூட்டிகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. சிவாங்கி அஸ்வினே என்று அழைத்தே அஸ்வினுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கி விட்டார். அது மட்டுமல்லாமல் புகழோடு சேர்ந்து இவர் அடிக்கும் அண்ணன் தங்கச்சி லூட்டிகளும் வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிகமான மீம்ஸ்களில் புகழ் மற்றும் சிவாங்கியின் க்யூட்டான புகைப்படங்கள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

பாடலால் அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வப்போது சிவாங்கி எடுத்துவிடும் பாட்டுக்கள் வேற லெவலில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இது அதுவரைக்கும் குழந்தைத்தனமாக கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருக்கும் சிவாங்கி பாடல் என்று வந்துவிட்டால் அப்படியே டோட்டலாக தன்னுடைய குரலை மாற்றி இவர் மொத்தமாக தன்னுடைய பாட்டு திறமையை வெளிக்கொண்டு வந்த விதம் பலரும் பாராட்டி கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது வெள்ளி திரையிலும் சிவாங்கிக்கு வாய்ப்பு கிடைத்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குக்காக மாறியாச்சி
அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களின் பாடல்களுக்கும் சிவாங்கி பாடி கொண்டிருக்கிறார். பல ஆல்பம் சாங்களிலும் சிவாங்கி பாடி சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கோமாளியாக இல்லாமல் குக்காக அதுவும் கிளாசுக்கு சென்று சமையலை நன்றாக கற்றுக் கொண்டு இந்த சீசனில் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் நான் குக்காக மாறினாலும் எனக்குள் ஒரு கோமாளி ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவாங்கி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மாறாத சேட்டைகள்
அந்த வீடியோவில் சிவாங்கி ஷூட்டிங்க்கு வந்த வெங்கடேஷ் பட்டின் காரை வழிமறித்து செய்யும் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. காரில் இருந்தபடியே சிவாங்கி வெங்கடேஷ் பட்டை கலாய்த்து கொண்டிருக்கிறார். காரை விட்டு கீழே வந்து விஜே விஷால் மற்றும் ஐயப்பனை அதிகமாக கலாய்த்து கொண்டிருக்கிறார். துருதுருவென சிவாங்கி செய்யும் சேட்டைகள் அதிகமான ரசிகர்களால் கவரப்பட்டு தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications