ரசிகர்களை கலவரப்படுத்திய சமையல் ஸ்பெஷல்...மாஸ்டர் செஃப்பில் மார்க்கமாக தான் பண்றாங்கப்பா...
சென்னை : இதையெல்லாம் சமையல் ஸ்பெஷலா என்று பார்ப்பவர்கள் எல்லாம் பதறி போகிற மாதிரி நாம யூஸ் பண்ணிக்கிட்டு தூக்கி போடுற பொருட்களைக் டாஸ்க் ஆக கொடுத்து ரணகளம் படுத்திவிட்டார்கள்.
முட்டை ஓடு, மீன் முள், கோழி பாதம், வாழைப்பழத் தோல் என்று வரிசை கட்டிக் கொண்டு வந்த பொருள்களைப் பார்த்து கண்டஸ்டண்டுகள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டார்கள்.
அதிர்ச்சி கொடுக்கலாம் ஆனால் அதற்காக இப்படியா ரணகளம் படுத்துவீங்க என்று பலர் புலம்பினாலும், அதிலும் நாங்கள் கைதேர்ந்தவர்கள் தான் என்று கண்டஸ்டண்டுகள் கலக்கி விட்டார்கள்.

ரணகளமான டாஸ்க் தான்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரணகளமான சமையல் ஸ்பெஷல் பொருட்களைக் கொடுத்து
அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து விட்டார்கள். பார்த்துக்கொண்டு இருக்கிற ரசிகர்களுக்கே இப்படி இருக்கிறது என்றால் கண்ட்ஸ்டன்களில் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து பார்த்தாலே அவர்களின் முகம் கண்முன்னே வந்து போகிறது. வரிசையாக வந்து இறங்கிய பொருள்களை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. இருந்தாலும் நாங்கள் இதிலேயும் சளைத்தவர்கள் அல்ல என்று பார்த்து பார்த்து பக்குவமாக சமையல் செய்து அசத்தி விட்டார்கள். சுவையும் புது முயற்சியும் கைகொடுக்க இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக தான் இந்த நிகழ்ச்சி இருந்திருக்கிறது.

வேஸ்ட் எல்லாம் யூஸ் பண்ணியாச்சு
இந்த வார நிகழ்ச்சியில் நாம் சமையலறையில் பயன்படுத்திவிட்டு இது எல்லாம் வேண்டாம் என்று தூக்கி வீசும் பொருட்களை வைத்து தான் ஸ்பெஷல் சமையல் செய்திருக்கிறார்கள். அப்படி என்னதான் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் மீன் முள், முட்டை ஓடு, பட்டாணி தோல், சோளத்தின் தண்டு இதுமட்டுமல்லாமல் வேகவத்த கொண்டைக்கடலை தண்ணீர், வாழைப்பழத் தோல், தர்பூசணி தோல், பலாப்பழம் கொட்டை இவற்றை வைத்துதான் அனைவரும் வித்தியாசமாக சமையல்களை செய்து நடுவர்களை ஆச்சரியப்படுத்த போகிறார்கள் என்று விஜய் சேதுபதி சொன்னதும் அனைவருக்குமே என்ன இப்படி பண்றாங்க...இதுல எப்படி செய்யமுடியும் என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆனால் போட்டியின்னு வந்து விட்டால் நாங்கள் சிங்கம் என்பது போல எந்த பொருள்களிலும் விதவிதமான சமையல் செய்து ரசிகர்களை மட்டுமல்லாமல் நடுவர்களையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்கள் கன்டஸ்டன்ட்கள்.

இப்படியெல்லாம் மிரட்டாதிங்கப்பா
சேதாரத்தை ஆதாரமாக வைத்து சமைக்க போகிறார்கள் அதாவது வேஸ்ட் ஆன பொருட்களை டேஸ்டாக மாற்றப் போகிறார்கள் என்று விஜய் சேதுபதி ரைமிங்கில் பேசிக்கொண்டிருந்ததை பார்க்கும்போது, சிலருக்கு கை தட்டலாம் போல இருந்தாலும், இந்த கலவரத்திலும் உங்களுக்கு ரைமிங் கேட்கிறதா என்று சிலருக்கு மனதில் தோன்றி இருக்கிறது. மேலே குறிப்பிட்ட பட்டியலில் மூன்று ஐட்டங்களை வைத்து ஸ்டார்ட்டர், அடுத்த மூன்று ஐட்டங்களை வைத்து மெயின் கோர்ஸ் அதற்கு அடுத்த ஐட்டங்களை வைத்து டெஸர்ட் ஆகிய உணவு வகைகளை போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்பதுதான் இந்த எபிசோடில் டாஸ்க்.இதுவரைக்கும் நீங்க சந்தித்தது எல்லாம் சாதாரணம் இனிமேல்தான் கடுமையாக போகிறது என்று கரகரத்த குரலில் கெளஷிக் பேசியதை கேட்டதும் அனைவருக்கும் கொஞ்சம் ஜெர்க்காகத்தான் இருந்தது.

கைக்கு வந்ததும் சமையலா மாறிடுச்சு
ஸ்டார்ட்டர் வரிசையில் முதல் டீம் வந்தது கிருதாஜ் மற்றும் தேவகி அணி செய்திருந்த மனுவின் பெயர் தீப்பொறி சிக்கன், இதை டேட்ஸ்ட் செய்த விஜய் சேதுபதி இது ஸ்பைஸியா இல்லையே என்று கூறிவிட்டார். இவர்களுடன் போட்டியிட்ட ஷாஜியா-ஆர்த்தி உருவாக்கியிருந்த மெனுவில் பெயர் தாய் பொரிச்ச கோழி இதை சாப்பிட்டு பார்த்த நடுவர்கள் இதோட டேஸ்ட் பாங்காங் ஸ்ட்ரீட் புட் சாப்பிட்ட ஃபீல் வருகிறது என்று பாராட்டுகளை வழங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் முட்டை ஓட்டை வைத்து இவர்கள் செய்து இருந்த டிஷ்யூம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டை பெற்று விட்டது. அடுத்த டீம் ஆன சுமித்ரா- சசியும் செய்திருந்த மெனுவின் பெயர் 'வேஸ்டா இந்த தமாலி' வேஸ்டா போன பொருள்களை வைத்து செஞ்சதுனால இவர்கள் இந்த மாதிரியெல்லாம் பெயர் வைத்து விட்டார்கள் போல, இவர்களுக்கு போட்டியாக நஸ்வீன் அணி வேற 'லெவல் வேஸ்ட்' என்று பெயர் வைத்து டிஷ் செய்து அசத்தி விட்டார்கள்.

வேஸ்ட் எல்லாம் டேஸ்டாக மாறிவிட்டது
மொத்த அணிகளும் செய்ததில் சிறப்பான அனைவரின் மனதை கவர்ந்த டிஷ்ஷாக "மிச்சம் அமிர்தம்" தேர்வுசய்யப்பட்ட பட்டது இதைப் பார்த்ததும் மணிக்கும் விண்ணிகும் செம சந்தோசம் தான். மணி ஏற்கனவே விஜய்சேதுபதியின் சிபாரிசில் மீண்டும் நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டு இருக்கும் போது இந்த வாரம் இவருடைய டிஷ் அசத்தி விட்டது,கொஞ்சம் சிறப்பாக தான் இருந்தது. இருந்தாலும் கடைசியாக விஜய் சேதுபதியை கட்டியணைத்து ஒவ்வொரு வாரமும் உங்களை கட்டி அணைத்தால் தான் எனக்கு எனர்ஜி என்று கூறியிருக்கிறார். அதற்கு கூலாக விஜய் சேதுபதியும் அப்படி எல்லாம் உன்னை இருபத்தி ஆறு வாரமும் வைத்துக்கொள்ள முடியாது என்று தனக்கே உரிய நக்கலோடு கூறியிருக்கிறார். ஒரு வழியா இந்த வாரம் ரணகளமான சமையல் ஸ்பெஷலோடு முடிந்து இருந்தாலும் அடுத்த வாரம் என்னத்த கொண்டுவர போகிறார்களோ என்று ஒன்னும் தெரியலையே என கன்டஸ்டண்டுகளும் ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications