அப்பாவை பற்றி சொன்ன ஒரே வார்த்தை.. தங்க காப்பை கழட்டி கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜன்.. கடைசியில் ஏமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில், சிரிப்பை தாண்டி சர்ச்சைகளாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டதாக கூறப்பட்ட பிரச்சனைகள், போட்டியாளர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் என பரபரப்பு நீடித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ இன்னொரு விதமான கவனத்தை ஈர்த்துள்ளது.

குக் வித் கோமாளி இந்த வாரம் ப்ரோமோ
இந்த வாரம் "நம்ம வீட்டு கல்யாணம்" என்ற தலைப்பில் நடைபெறும் சுற்றில், கல்யாண வீடுகளில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகளை போட்டியாளர்கள் தயாரிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளராக கலந்துகொண்ட மஞ்சுநாதன், டிராகன் ஃப்ரூட் வைத்து அல்வா செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.
அந்த உணவை ருசித்த நடுவரான மாதம்பட்டி ரங்கராஜன், மெய்மறந்து போனபடி "இது ரொம்ப அருமை... நீங்க நல்ல வேலைக்காரன் தான்" என்று பாராட்டுகிறார். அந்த பாராட்டை கேட்ட மஞ்சுநாதன் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே தரையில் விழுந்து வணங்குகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜன் செய்த செயல்
அதற்கு பின் அவர் கூறிய விஷயம் தான் அங்கிருந்த அனைவரையும் நெகிழச்செய்தது. "இந்த டிஷ் உங்க அப்பா கிட்டிருந்து கற்றது... உங்க அப்பா என் கல்யாணத்தில் இதை சமைத்திருந்தார்... அதைப் பார்த்துதான் நான் இதை முயற்சி பண்ணேன்" என்று சொன்னதும், ரங்கராஜன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
உடனே சந்தோஷத்தில், நீ என்னுடைய அப்பாவின் டிஷ் என்று சொல்லிவிட்டாய் அதனால் பரிசுத்தந்தே ஆக வேண்டும் என்று தன்னுடைய கையில் இருந்த தங்க காப்பை கழற்றி மஞ்சுநாதனுக்கு பரிசாக அளித்தார். ஆனால் அடுத்த நிமிடமே மஞ்சுநாதன் எடுத்த முடிவு தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. "எனக்கு கிடைத்த பாராட்டு பணமாகவோ நகையாகவோ இருக்க வேண்டாம்... உங்க அன்பே பெரியது" என்று சொல்லி, அந்த காப்பை மீண்டும் ரங்கராஜனிடம் திருப்பி கொடுத்தார்.
ரசிகர்கள் கருத்து
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் "இது தான் உண்மையான மரியாதை... உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் பணத்தை விட பெரியது" என்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் "கொடுத்த பரிசை திருப்பி கொடுத்தது கொஞ்சம் ஓவரா இல்லையா?" என்ற கோணத்திலும் விவாதம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியை சுற்றி ஏற்கனவே பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. "வாட்டர்மெலன்" திவாகர் அளித்த புகார், புகழ், கானா வினோத் மற்றும் மா கா பா ஆனந்த் மீது குற்றச்சாட்டு உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் அடங்காத நிலையில் உள்ளன. அதோடு, சமீபத்திய ப்ரோமோவில் ரோஜா தனது அப்பாவை நினைத்து அழுத காட்சியும் ட்ரோல்களுக்கு உள்ளானது.
இந்த பின்னணியில், மஞ்சுநாதன் - ரங்கராஜன் இடையே நடந்த இந்த சம்பவம் மட்டும் சற்றே பாசிட்டிவான உணர்வை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர். "சர்ச்சை, சண்டை எல்லாம் இருக்கட்டும்... இப்படி மனசை தொடும் தருணங்களும் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறது" என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.
மொத்தத்தில், சிரிப்பும் சர்ச்சையும் உணர்ச்சியும் கலந்த கலவையாக 'குக் வித் கோமாளி' சீசன் 7 தொடர்ந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications