Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக குடும்பம் முழுக்க பார்த்து ரசிக்கும் ஒரு பெரிய ஹிட் ஷோவாக இருந்து வருகிறது. சமையல், காமெடி, கலாட்டா எல்லாம் கலந்த இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Cooku With Comali CWC Vijay TV Manimegalai Zoya Roja

மணிமேகலையின் வெளியேற்றம்

ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக இந்த நிகழ்ச்சியும் சும்மா போகவில்லை. பிக் பாஸ் தமிழ் மாதிரி சர்ச்சைகள் இங்கும் வர ஆரம்பிச்சது. அதிலும் முக்கியமாக நிகழ்ச்சியின் முக்கிய முகமாக இருந்த மணிமேகலை திடீரென வெளியேறியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்திலிருந்து இந்த நிகழ்ச்சியின் மீது இருந்த ஹைப் கொஞ்சம் குறைந்தது என்பதும் உண்மை.

குக் வித் கோமாளி 7 அப்டேட்

இப்போ அந்த நிலையை மாற்றணும் என்பதற்காக தான் குக் வித் கோமாளி குழு இந்த 7வது சீசனில் பல புதிய முயற்சிகளை எடுத்திருக்கிறது. அதில் முதல் பெரிய மாற்றம் தொகுப்பாளரில்தான். எப்போதும் போல ராக்ஷன் இந்த சீசனையும் நடத்துகிறார். ஆனால் இந்த முறை அவருடன் சேர்ந்து ஜோயா இணைந்திருக்கிறார். கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவர், இப்போது தொகுப்பாளராக வருவது ஒரு சின்ன ட்விஸ்ட் தான்.

குக் வித் கோமாளி நடுவர்கள்

அடுத்த பெரிய மாற்றம் நடுவர்களில். ஆரம்பத்தில் இரண்டு செஃப்களோட ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, இப்போது நான்கு பேராக மாறி இருக்கிறது. தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் சங்கர் இவர்களுடன் சேர்ந்து நடிகை ரோஜா நடுவராக வருவது தான் இந்த சீசனின் ஹைலைட். ரோஜா வருவது ரசிகர்களிடம் நல்ல அளவில் பேசப்படுகிறது.

இந்த சீசனின் முக்கியமான மாற்றம் போட்டியாளர்களில்தான். இதுவரை தனி தனியாக குக்குகள் வந்த நிலையில், இந்த முறை கணவன் - மனைவி ஜோடியாக போட்டியாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள். அதாவது ரியல் லைஃப் ஜோடிகளே போட்டியில் பங்கேற்கிறார்கள்.

Cooku With Comali CWC Vijay TV Manimegalai Zoya Roja

குக் வித் கோமாளி 7 போட்டியாளர்கள்

அந்த வகையில் பாடகர் மனோ மற்றும் அவரது மனைவி ஜமீலா, அய்யனார் துணை சீரியல் அரவிந்த் - சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, சம்யுக்தா - அனிருத்தா போன்ற ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். இதனால் சமையலுக்கு கூடுதலாக குடும்ப கலாட்டாவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோமாளிகள் பக்கம் பார்த்தால், பழைய ஹிட் டீம் தான் மீண்டும் வருகிறார்கள். புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை போன்றவர்கள் இந்த சீசனிலும் கலாட்டா செய்ய இருக்கிறார்கள்.

மொத்தத்தில் பார்க்கும்போது, கடந்த சீசன்களில் குறைந்த டிஆர்பியை மீண்டும் உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த முறை முழுக்க புதிய முயற்சியோடு களம் இறங்கியிருக்கிறது குக் வித் கோமாளி. சர்ச்சைகள் இருந்தாலும், இந்த புதிய ஜோடி கான்செப்ட், ரோஜா போன்ற புதிய முகங்கள், தொகுப்பாளர்களில் மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து இந்த சீசனுக்கு மீண்டும் ஹைப் உருவாக்கியிருக்கிறது.

ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கும் இந்த 7வது சீசன், பழைய வெற்றியை மீண்டும் பிடிக்குமா, இல்லையா என்பது தான் இப்போது ரசிகர்கள் கவனித்து பார்க்கும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+