அடடா.. அஸ்வினுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பாருங்க.. அவரே அசந்துட்டாரே!
சென்னை: எந்த உயரத்திற்கு சென்றாலும் இதுவெல்லாம் என்னால் நடந்தது அல்ல ரசிகர்களின் அன்பினால் மட்டுமே என எளிமையின் சொரூபமாக இருக்கும் அஸ்வினுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு தான் இப்போ ஹைலைட்.
பெரிய கதாநாயகர்களுக்கு இருக்கும் பாலோவர்ஸ்களை விடவும் அதிகமான பாலோவர்ஸ்களைப் பார்த்து திக்குமுக்காடிப் போயுள்ளார் அஸ்வின்.
தன்னோட புது பட சூட்டிங் பற்றியும் ரசிகர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாக பதில் கொடுத்தும் இவர் பேசிய வீடியோக்கள் தான் இப்போ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

பேசினாலே அதிசயம் ஆனாலும் பிடிக்குதே
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பலருக்கும் பிடிக்கும். அதுவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு கன்டஸ்டன்ட்களுக்கும் ஒரு விதமாக ரசிகர்கள் பட்டாளம் குவிந்திருக்கின்றன. அதில் பல பேர் இருந்தாலும் அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்து இழுத்ததில் அஸ்வினும் ஒருவர். இவருடைய சிம்பிளிசிட்டி இதுதான் இவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இப்போ இவருக்கு ரசிகர்களிடம் செம வரவேற்பு இருக்கின்றது. ஆனால் வந்த இடத்தை கொஞ்சம் கூட மறக்காத அஸ்வினும் ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நன்றி கூறி வருகின்றார்.

மிரள வைத்த ரசிகர்கள்
தற்போது இன்ஸ்டாகிராமில் இவருக்கு 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். இதனை சந்தோஷமாக லைவில் வந்து ரசிகர்களுடன் கொண்டாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அதில் ரசிகர்கள் இவரிடம் கேட்ட சந்தேகங்களுக்கும் தனக்கே உரிய கலக்கலான புன்னகையில் பதில் அளித்துக் இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு சில திரைப்படங்களிலும் பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெரும் புகழையும் இந்த நிகழ்ச்சி இவருக்கு வாங்கி கொடுத்து விட்டது.

பெண்களின் சாக்லேட் பாய்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்போது நேஷனல் கிரஷ் ஆகவும் இவருடைய பெயர் பரிசீலனையில் இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் அந்தப் பட்டத்தையும் இவர் பெற்றுவிடுவார். அந்த அளவில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் இவருக்கு கொடுக்கும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பார்த்து வியந்து போய் இருக்கிறாராம்.

அன்பை நிரூபித்த ரசிகர்கள்
தன்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் ரசிகர்கள்தான் காரணம் என்று உருகி உருகி பேசியிருக்கிறார். தனக்கு அந்த அளவிற்கு பெரிய அளவில் வசதியோ படைபலனும் கிடையாது. ஆனால் ரசிகர்களின் பலன் மட்டும் தான் என்னை இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய வைத்துக்கொண்டிருக்கிறது. நான் ஒவ்வொரு முறையும் டவுனாகும் நேரத்தில் எனக்காக குரல் கொடுத்து என்னை நிமிர வைப்பது ரசிகர்களாகிய நீங்கள் மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் எனக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதற்காக பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன் அது இப்போது நடக்கிறது என்று தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்.

மெர்சல் பண்ணிட்டாரே சிவாங்கி
இவர் லைவ்வில் பேசிக்கொண்டிருக்கும் போது இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில்தான் நம்ம சிவாங்கியும் ஒரு மெசேஜ் போட்டு அனைவரையும் பரவசப் படுத்தி விட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினை இந்த அளவில் பாப்புலராகியதற்கு சிவாங்கியும் ஒரு காரணம் தான் என்று அனைவருக்குமே தெரியும். சிவாங்கி அடிக்கடி அஸ்வினை கலாய்த்து இவர் பலருடைய கவனத்தையும் ஈர்த்து விட்டார். அதுவும் அஸ்வினே...என்று சிவாங்கி அழைத்த பிறகு தான் இப்போ ரசிகர்கள் எல்லாம் அதே அஸ்வினே....என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று லைவ்வில் ஹலோ மன்னா வெல்கம் டு கிளப் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். இவருடைய கமெண்டை பார்த்ததும் ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர். இப்போ அஸ்வினை மன்னா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தரமான சம்பவம் இருக்கு
குக் வித் கோமாளி செலபிரேஷனில் தானும் கலந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கிறது. இதற்கு முன்பு எபிசோடுகளில் எல்லாம் நான் எக்ஸாம் எழுதும் மாணவன் போல தான் வந்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த எபிசோட்டில் சந்தோஷமாக என்ஜாய் பண்ணி இருக்கிறேன். என்னுடைய உண்மையான கேரக்டரை இதில் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். இவர் இப்படி சொன்னதும் அந்த நிகழ்ச்சியை எப்போது ஒளிபரப்புவார்கள் என்று இவருடைய ரசிகர்கள் டிவி முன்பே காத்து இருக்க ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications
