அரைகுறை ஆடையுடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்.. அட கேவலமே, முகம் சுளிக்க வைத்த காட்சி
சென்னை: பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது நடிகர் கூல் சுரேஷ் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வித்தியாசமாக ஏதாவது கத்திக் கொண்டிருப்பார். அல்லது படத்தை குறித்து ரைமிங்காக பேசிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்பட பார்ப்பதற்காக அரைகுறை ஆடையுடன் வந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த பலர் காமெடியாக இருக்க மாட்டார். ஆனால் ஒரு சிலர் மட்டும் இவர்கள் எப்பவுமே இப்படித்தானா என்று யோசிக்க வைப்பார்கள். அதுபோல ஒருவர்தான் கூல் சுரேஷ். கூல் சுரேஷ் என்றதுமே சமீபகாலமாக அவர் தியேட்டரில் நின்று வித்தியாசமாக கத்துவது தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.

பிக் பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியின் சொரூபமாக இருந்து எந்த பிரச்சனை நடந்தாலும் இதனால் தனக்கு எதுவும் மரியாதை குறைவாக வெளியே போய் விடக்கூடாதே என்று வாயை மூடிக்கொண்டிருந்த கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தியேட்டர் வாசலில் நின்று கத்த தொடங்கி விட்டார். பிக் பாஸ்க்கு முன்பு இவர் இப்படி இருந்த நிலையில் பிக் பாஸில் இவருடைய மாற்றம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
குழப்பத்தை ஏற்படுத்திய செயல்
இதில் எது உண்மையான முகம்? என்று எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் 80 நாட்களைக் கடந்திருந்த கூல் சுரேஷ் வெளியே வந்ததும் மீண்டும் பழைய நிலையில் வலம் வருவதை பார்த்து இவர் திருந்தல மாமா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இன்று மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் சுமோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சிவாவின் சுமோ திரைப்படம்
சுமோ திரைப்படத்தில் சிவா உடன் காசேதான் கடவுளடா, வணக்கம் சென்னை போன்ற திரைப்படத்தில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. க்ரிஞ்ச் காமெடிக்கு பெயர் போன சிவாவின் இந்த சோமா திரைப்படம் சிறப்பாக இருக்குமா? அல்லது நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் சிறப்பாக இருக்கிறதா? என்ற விவாதம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
ரசிகர்கள் ட்ரோல்
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் கூல் சுரேஷ் வந்திருக்கிறார். பொதுவாக திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்காக வித்தியாசமான கெட்டப்பில் வரும் கூல் சுரேஷ் இந்த சுமோ திரைப்படத்தை புரமோட் செய்வதற்காக அரைகுறை ஆடையுடன் வந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் ஆடை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாரா? அல்லது கோவணம் கட்டிக்கொண்டு வந்து இருக்கிறாரா? என்று ட்ரோல் செய்கிறார்கள்.
அரைகுறை ஆடை
அதிலும் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு மேலே போட்டு இருந்த சட்டையை கூட கழட்டி விட்டு வெறும் உடம்புடன் திரிந்திருக்கிறார். இது பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தியேட்டரில் இதுபோன்ற உடையில் இவரை எப்படி அனுமதித்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications