Coolie 2nd day collection: வசூலை அள்ளும் கூலியின் இரண்டாவது நாள்.. அதுவும் இத்தனை கோடியாமே!
சென்னை: (Coolie 2nd day collection) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஐந்து மொழிகளில் வெளியான 'கூலி' திரைப்படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் நாளில் ₹65 கோடி வசூலித்த இந்தப் படம், இரண்டாம் நாளில் ₹53.50 கோடி வசூலித்து, மொத்தமாக இரண்டு நாட்களில் ₹118.5 கோடி வசூலித்துள்ளது. இது, முதல் இரண்டு நாட்களிலேயே ₹100 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கூலி - வசூல் சாதனை
இந்திய வசூல்: Sacnilk அறிக்கையின்படி, 'கூலி' படத்தின் முதல் நாள் இந்திய வசூல் ₹65 கோடி, இரண்டாம் நாள் வசூல் ₹53.50 கோடி. ஆக மொத்தம், இரண்டு நாட்களில் இந்திய வசூல் ₹118.5 கோடி. என்று கூறப்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆஸ்திரேலியாவில் 'கூலி' திரைப்படம் முதல் நாளில் 5,35,000 டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ₹3 கோடிக்கும் மேல் ஆகும். இதுவரை ஆஸ்திரேலியாவில் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்த முதல் தமிழ் படம் 'கூலி'தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை தினங்களின் தாக்கம்
இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், 'கூலி' படத்தின் வசூல் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி படங்கள் வெளியாகும்போது அதை விஜய் படங்களுடன் ஒப்பிடுவது வழக்கம். அந்த வகையில் 'லியோ' படத்தின் வசூலையும், 'கூலி' படத்தின் வசூலையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். 'லியோ' படம் முதல் நாளில் ₹145 கோடி வசூலித்தது. ஆனால், 'கூலி' படம் அதை முந்தி, முதல் நாளில் ₹170 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
படத்தின் விமர்சனங்கள்
படத்தில் கதை பெரிதாக இல்லை என்றும், பழிவாங்கும் கதைக்களம் வழக்கமான பாணியில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லை, ரஜினிக்கு ஜோடி இல்லை போன்ற கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன. எனினும், படத்தின் விறுவிறுப்புக்கும், ரஜினியின் ஸ்டைலுக்கும் குறைவில்லை. அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ரஜினிகாந்தின் 50 வருட திரை வாழ்க்கைக்கு இந்த படம் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி - ஓடிடி ரிலீஸ் விவரம்
பொதுவாக, ஒரு படம் வெளியாகி, நான்கு வாரங்கள் கழித்து, ஓடிடியில் ரிலீஸ் செய்யும் நடைமுறை, தமிழ்நாட்டில், இருக்கிறது. இப்போது, 'கூலி'க்கு, முதல் நாளே, எதிர்மறையான விமர்சனங்கள், வரத் தொடங்கியிருப்பதால், அடுத்த மாதமே, அமேசான் பிரைம் ஓடிடியில், படம், 'ஸ்ட்ரீம்' ஆக, வாய்ப்புகள் அதிகம், என்று, கருதப்படுகிறது. அக்டோபர் மாதம், வரவிருக்கும் தீபாவளிக்கு, 'கூலி' திரைப்படம், சன் டிவியில், சிறப்புத் திரைப்படமாக, ஒளிபரப்பாகவும், வாய்ப்புகள் அதிகம், என்று, கணிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜின் நிலை
'லியோ'க்கு பிறகு கோலிவுட்டின், இப்போதைய தலைமுறை இயக்குநர்களில், லோகேஷ் கனகராஜ், நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தை, விஜய்யை வைத்து, அவர் இயக்கிய 'லியோ' திரைப்படம், அசைத்து பார்த்தது. அதனை, ரஜினியை வைத்து இயக்கும் 'கூலி' படத்தில், சரி செய்துவிடலாம், என்று, அவர் நினைத்தார்.நம்பர் 1 இயக்குனர், பல ஸ்டார்கள், எல்லாத்துக்கும் மேலாக, சூப்பர் ஸ்டார், என, பிரமாண்ட கூட்டணியில் உருவான 'கூலி' படத்திற்கு, எக்கச்சக்க அளவு, 'ஹைப்' ஏற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications