Coolie Box Office Collection Day 10: குறையும் கூலி பாக்ஸ் ஆபீஸ் வசூல்! 10ஆவது நாளில் வசூல் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூலி படம் இந்தியா முழுவதும் இதுவரை எத்தனை கோடி வசூலை அள்ளியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் 10ஆவது நாளான நேற்று இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் எவ்வளவு லாபம் ஈட்டியது என்பதையும் பார்க்கலாம். கடந்த 14 ஆம் தேதி வெளியான கூலி தற்போது வரை மாஸ் காட்டி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம்தான் கூலி. கடந்த 14 ஆம் தேதி அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியானது. படம் வெளியான முதல் நாளே ரூ 65 கோடி வசூலை குவித்தது. அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் வசூலில் சற்று சரிவை சந்தித்தது.

television coolie

கூலி திரைப்படம் இதுவரை ரூ 242.34 கோடி வசூலை அள்ளியுள்ளது. 10ஆவது நாளான நேற்று இந்தியாவில் கூலி படம் ரூ 6.84 கோடி வசூலை குவித்தது. படம் வெளியாகி நேற்று இரண்டாது சனிக்கிழமையாகும்.

நேற்று தமிழ் மொழியில் கூலி படத்தை பார்க்க தியேட்டர்களில் 31.33 சதவீதம் பேரும் இந்தி மொழியில் 12.95 சதவீதம் பேரும் தெலுங்கு மொழியில் 21.47 சதவீதம் பேரும் கூடினர்.

சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், பாங்காங் உள்ளிட்ட இடங்களில் கூலி திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் ரூ 229.65 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரேபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், மோனிஷா பிளஸ்ஸி, காளி வெங்கட், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஐமாக்ஸ், டிபாக்ஸ், 4 டிஎக்ஸ் ஆகிய ஃபார்மட்டுகளில் வெளியாகியுள்ளது. கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதியில் அமேசான் பிரைமில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

சென்னையில் மேன்சன் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. இங்கு தங்கும் இளைஞர்களுக்கு சில நல்ல விதிமுறைகளை விதிக்கிறார். அதாவது குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது. இரவு நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது உள்ளிட்ட விதிகள் இந்த மேன்சனில் உள்ளன.

அந்த "தேவா மேன்சன் " நடத்தும் ரஜினிக்கு அவருடைய நண்பர் சத்யராஜ் மாரடைப்பில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரது இறப்பு இயற்கையானது அல்ல, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்தது போல் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நண்பனை கொலை செய்து , 3 பெண் குழந்தைகளையும் நிராதரவற்றவர்களாக மாற்றியது யார் என்பதையும் ரஜினி கண்டறிகிறார். இந்த படத்தில் ரஜினிக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+