கூலி படம் வெளியாகும் முன்பே.. அடித்து தூக்கிய லோகேஷ் கனகராஜ்.. ரிலீசுக்கு முன்பே ரூ.350 கோடி வசூல்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹250 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ₹375 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 நெருங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' திரைப்படத்துடன் நேரடியாக மோதவிருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படம் குறித்த ஆர்வமே அதிகம் உள்ளது. வார் 2 படத்தை விட பல மடங்கு புக்கிங் தியேட்டர்களில் நடந்து வருகிறது.

இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட வட்டார தகவல்களின்படி, "கூலி" திரைப்படம் தனது சர்வதேச, டிஜிட்டல், இசை மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் ₹350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. அதேபோல் டிக்கெட் புக்கிங் தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பல லட்சம் டிக்கெட்டுகள் புக் ஆகி உள்ளன. மொத்தமாக இதன் மூலம் 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் - கூலி
இப்படத்தில் ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம், விஜய்யின் "லியோ" படத்தின் முந்தைய வசூல் சாதனையை "கூலி" முறியடித்துள்ளதாகத் தெரிகிறது.
மறுபுறம், ஆமீர் கானின் "சிதாரே ஜமீன் பர்" திரைப்படம் ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆகஸ்ட் 1 அன்று யூடியூபில் பே-பர்-வியூ (Pay-Per-View) மாடலில் டிஜிட்டல் வெளியீட்டை சந்தித்தது. ஓடிடி வெளியீட்டை தாமதப்படுத்தி, யூடியூப் வழியாக இப்படத்தை வெளியிடும் ஆமீர் கானின் இந்த முடிவு தைரியமானதாகக் கருதப்படுகிறது.
மேத்யூ பெலோனியுடன் நடந்த உரையாடலில், ஆமீர் கான், "சிதாரே ஜமீன் பர்" படத்தின் ஓடிடி உரிமைகளை இன்னும் விற்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். "ஓடிடி தளங்கள் யாரும் இந்த வெளியீட்டு முறைக்கு உடன்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டார். இதனால், இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை.
வார் 2 - கூலி மோதல்
கூலி' திரைப்படம் அதன் பட்ஜெட்டான ₹375 கோடியில் ஏற்கனவே ₹250 கோடி வசூலித்துள்ளதாகக் கூறுகிறது. பிங்க்வில்லா அறிக்கையின்படி, வெளிநாட்டு விநியோகம், டிஜிட்டல், இசை மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மூலம் ₹250 கோடி வசூலாகியுள்ளது.
வெளிநாட்டு உரிமைகள் ₹68 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி', தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது பெரிய வெளிநாட்டு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. கோய்மோய் அறிக்கையின்படி, 'கூலி' படத்தின் ஓ.டி.டி உரிமைகள் ஒரு முன்னணி தளத்திற்கு ₹120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இது போக கடந்த 2 நாட்களில் மட்டும் பல லட்சம் டிக்கெட்டுகள் புக் ஆகி உள்ளன. மொத்தமாக இதன் மூலம் 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
அடித்து தூக்கும் கூலி படம்
படத்தின் உரிமைகள் மூலம் பெரும் தொகையை ஈட்டியதுடன், வெளிநாட்டு சந்தைகளில் முன்பதிவு மூலமும் 'கூலி' சாதனை படைத்து வருகிறது. சாக்னில்க் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் ₹30 கோடி முன்பதிவு வசூலாகியுள்ளது. இதன் மூலம், விஜய்யின் 'லியோ' படத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ் படங்களுக்கான வெளிநாட்டு ஓபனிங் சாதனையை 'கூலி' முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம், முதல் நாளில் வெளிநாடுகளில் ₹66 கோடி வசூலித்திருந்தது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'கூலி'யை தயாரித்துள்ளது. ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், மற்றும் அமீர் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரச்சிதா ராம், ரீபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், கண்ணா ரவி, மோனிஷா பிளஸ்ஸி, காளி வெங்கட், மற்றும் சார்லி ஆகியோரும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடலோரப் பகுதியில் கூலிகளை சுரண்டி வரும் ஊழல் அமைப்பிற்கு எதிராகப் போராடும் ஒரு மர்ம மனிதனின் கதையை 'கூலி' சொல்கிறது.












Click it and Unblock the Notifications