Coolie First Review: ரசிகர்களுக்கு படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! கூலி கதை இதுதான்! ஆனால்! வெளியான ரிவ்யூ
சென்னை: (Coolie First Review) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் ஸ்பெஷல் ஷோவை இன்று பிரபலங்கள் பார்க்கின்றனர். ரஜினியின் 171வது படமான இது, ரஜினி-லோகேஷ் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தைப் பற்றி உமர் சந்து கொடுத்த ரிவ்யூ பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.

கூலி- ஒரு மாஸ் என்டர்டெயினர்
'கூலி' படத்தில், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நித்யா ராம், சார்லி, ஜூனியர் எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் அமீர்கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
கூலி பட கதைச்சுருக்கம்
ஒரு கடத்தல்காரராக இருந்து ஓய்வுபெற்றவர், பழங்கால தங்கக் கடிகாரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட திருடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது பழைய குழுவை மீண்டும் ஒன்றிணைப்பதே இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது
வசூல் சாதனை
'கூலி' படத்தின் டிக்கெட்டுகள், வியாழன் முதல் ஞாயிறு வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன. இதனால், பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த படம் முதல் நாளில் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா? அல்லது 1500 கோடி வசூல் செய்யுமா என்பதுதான் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதுபோல ஆரம்பத்தில் சென்னையில் இந்த படத்தின் டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று வெளியான தகவலின் படி 4500 வரைக்கும் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
கூலி பட விமர்சனம் (Coolie movie review)
துபாயைச் சேர்ந்த விமர்சகர் உமைர் சந்து, 'கூலி' ஒரு "ஒன் மேன் ஷோ" திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர், "பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் பலம். படத்தில் ஒரு சர்ப்ரைஸும் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
கூலி ரேட்டிங்:
உமைர் சந்து, இந்தப் படத்திற்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து, "மொத்தத்தில், ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு பைசா வசூல் மாஸ் படம். பாருங்கள்," என்று தெரிவித்துள்ளார். அவருடைய கூலி பட விமர்சனம் பலருடைய கவனத்தைப் பற்றி வரும் நிலையில் கடந்த காலங்களில், உமைர் சந்து, 'தக் லைஃப்' படத்திற்கு "பிளாக்பஸ்டர்" என விமர்சனம் கொடுத்து, அந்த படம் தோல்வியடைந்ததால், அவர் படங்களைப் பார்க்காமல் விமர்சனம் கொடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
சர்வதேச தணிக்கை
பிரிட்டிஷ் திரைப்பட வகைப்பாட்டு வாரியம், 'கூலி' படத்திற்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என சான்றிதழ் அளித்துள்ளது. இதில், வன்முறை, அச்சுறுத்தல், திகில் காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும், சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தணிக்கை வாரியம் (NC16), 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தியத் தணிக்கைக் குழு, இந்தப் படத்திற்கு 'ஏ' (பெரியவர்களுக்கு மட்டும்) சான்றிதழ் அளித்துள்ளது.
'கூலி' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரஜினியின் ரசிகர்கள், இந்தத் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
First Review #Coolie : One MAN SHOW flick all the way 🙌! #Rajinikanth is Back & Stole the Show. Power Packed performance by him. Heavy weight supporting cast also acted very well. Story & screenplay is average! Climax & last 20 minutes is the USP of film. Go for it !
— Umair Sandhu (@UmairSandu) August 10, 2025
3.5🌟/5🌟 pic.twitter.com/agi36rMgbl












Click it and Unblock the Notifications