அமெரிக்கரை திணற வைத்த ரஜினியின் கூலி.. ஒரே ஒரு பதிவால் தொடங்கிய விவாதம்! கடைசியில் இப்படி சொல்லிட்டாரு
சென்னை: ஒருநாள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஹாலிவுட் ரசிகர், தனது ஃபேவரிட் படமான 'வெப்பன்ஸ்' (Weapons) படத்தைப் பார்ப்பதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறார். அப்போது தான், அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! அந்த திரையரங்கில், ரஜினிகாந்தின் 'கூலி' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தாறுமாறாக நடந்து கொண்டிருந்தது. திரையரங்கின் பெரும்பாலான இருக்கைகள், முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுவும், ஒரு டிக்கெட்டின் விலை, 30 டாலர்கள்!

இதைப்பார்த்த அந்த அமெரிக்கர், உடனடியாக, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டையும், தன்னுடைய அதிர்ச்சியையும் சேர்த்து, 'எக்ஸ்' தளத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார். "இந்திய ட்விட்டர் நண்பர்களே, எனக்கு ஒரு விளக்கம் தேவை. இந்த 'கூலி' என்றால் என்ன? ஐந்து நாட்களுக்கான பாதி டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. ஒரு டிக்கெட்டின் விலை 30 டாலர்கள். இது, உங்கள் 'அவெஞ்சர்ஸ்' படமா?" என்று கேட்டார்.
அவரது ட்வீட்டைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், உடனடியாக, அவருக்கு 'கூலி' படம் பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும் விளக்கமளிக்கத் தொடங்கினர்.
மிரண்ட அமெரிக்கர்
ஒரு ரசிகர், "இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் தான் ரஜினி. அவருக்கு வயது 75. அவர், இன்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்தப் படத்தின் இயக்குநர், இதற்கு முன்பு எடுத்த ஐந்து படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி. இருவரும் சேர்ந்திருப்பதால், இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது," என்று விளக்கினார்.
இந்த விளக்கத்தைக் கேட்ட அமெரிக்கர், "நான் இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை. ஒரு டிக்கெட்டுக்கு மூன்று மடங்கு அதிகம் வாங்குகிறார்கள். இது மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது!" என்று வியப்புடன் கூறினார். அப்போது, இன்னொரு ரசிகர், "இது, கோலிவுட்டின் 'அவெஞ்சர்ஸ்' மொமன்ட். இது பாலிவுட் கூட இல்லை. சில பான் இந்திய நடிகர்கள் கவுரவத் தோற்றத்தில் வரும் தென்னிந்திய சினிமா," என்று விளக்க, கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று அந்த அமெரிக்கர் கேட்டார்.
அமெரிக்கரின் பாராட்டு
அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்த பிறகு, அந்த அமெரிக்கர், ரஜினிகாந்த் ஒரு GOAT (Greatest Of All Time) என்று பாராட்டுத் தெரிவித்தார். இதைக் கேட்ட தமிழ் ரசிகர்கள், "தலைவர் GOAT தான்!" என்று பெருமையுடன் கூறினர். இந்தப் பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க, பெங்களூரு ரசிகர்கள், "நாங்கள் தான் 'கூலி'யின் முதல் காட்சிக்காக அதிகபட்சமாக ₹2,000 கொடுத்திருக்கிறோம் என்று பார்த்தால், அமெரிக்காவில் ₹2,632 கொடுத்திருக்கிறார்களே," என்று வியப்புடன் கூறினர்.
'கூலி' படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ரசிகர்கள், "கூலி' கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். அதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. ₹1,000 கோடியா, ₹1,500 கோடியா என்பதுதான் எங்களின் கவனம்," என்று உற்சாகத்துடன் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இதற்கான விடைகள், இன்னும் ஓரிரு நாட்களில், 'கூலி' திரைப்படம் வெளியானதும் தெரிந்துவிடும்!
I’ve never seen anything like this. They’re charging 3X what a regular seat for other movies would go for. Very impressive. 👍
— Mannnnaayyyy (@whereismanny) August 9, 2025
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications