கூலி பட வில்லி ரச்சிதா ராமின் அக்கா இந்த சன் டிவி சீரியல் நடிகை! இளைஞர்களின் பேவரிட் ஹீரோயினி அவங்க!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி', இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. பான்-இந்திய திரைப்படமான இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் வெளியீட்டிற்கு முன், ₹1000 கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், முதல் காட்சியின் முடிவுக்குப் பிறகு, எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், மற்ற தமிழ் படங்களின் வசூலை 'கூலி' முறியடித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ரச்சிதா ராம் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கூலியின் வில்லி: ரச்சிதா ராம்
கூலி படத்தில், நடிகர் சௌபீன் ஷாகிர் தனது நடிப்பால் மிரட்டியிருந்தார். அதேபோல, நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர். இந்தப் படத்தில், ரசிகர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து, மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம் 'கல்யாணி'. 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்த 'டீனா'வை போலவே, இந்த 'கல்யாணி' கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
கன்னட சினிமாவின் பிரபலம்
கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்தவர் கன்னட நடிகை ரச்சிதா ராம். இவர் கன்னட சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக உள்ளார். ரச்சிதா ராம், 2013-ம் ஆண்டு கன்னடத் திரைப்படமான 'புல்புல்' மூலம் அறிமுகமானார். இவர், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றிருக்கிறார். ரச்சிதா ராம் தனது மிரட்டலான நடிப்பால், 'கூலி' படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தார்.
ரச்சிதா ராமின் அக்கா
'கூலி' படத்தில் ரச்சிதா ராம் நடித்தது குறித்துப் பேசப்பட்டபோது, ஒரு ஆச்சரியமான தகவல் வெளியானது. ரச்சிதா ராமின் அக்கா பிரபல சன் டிவி நடிகை நித்யா ராம் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் நித்யா ராம், சன் டிவியில் ஒளிபரப்பான 'நந்தினி' என்ற பிரைம் டைம் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தச் சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி, இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தினி சீரியல் ஒளிபரப்பாகி கொடுக்கும் போது பல இளைஞர்களின் கனவு கம்மியாக வலம் வந்தார். இப்போது கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
'கூலி' படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ராம், சன் டிவியில் மிகப் பிரபலமான 'நந்தினி' சீரியலில் நடித்த நடிகை நித்யா ராமின் தங்கை என்பது, ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அவரைப் பற்றி மேலும் சில தகவலையும் பார்க்கலாம்.
தமிழ் ரசிகர்களுக்கு இவர் இதற்கு முன்பு அதிகம் பரிச்சயம் இல்லையென்றாலும் கன்னடத்தில் அவர் மிகவும் பிரபலமானவர். அவரது கன்னக்குழிக்காக ரசிகர்கள் அவரை 'டிம்பிள் குயின்' என்று அழைக்கிறார்கள். 90ஸ் கிட்ஸ் வேர்லுக்கு லைலா எப்படி கன்னகுழி அழகியோ அதுபோல 2கே கிட்ஸ்கள் பலருக்கு இவர்தான் கன்னக்குழி அழகி. கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். அவர் நடித்த பல கன்னடப் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. ரன்னா, சக்ரவ்யூஹா,புஷ்பக விமானம், பர்ஜரி, அயோக்யா, சீதாராம கல்யாண, நடசார்வபவுமா, ஆயுஷ்மான் பவ போன்ற பல படங்களில் நடித்து கன்னட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக மாறிவிட்டார்.
வாழ்க்கையில் ஒரு புயல்
2019 ஆம் ஆண்டு வெளியான சீதாராம கல்யாண, நடசார்வபவுமா, ஐ லவ் யூ போன்ற படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. ஆனால் 2020 ஆம் ஆண்டு ரச்சிதா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்கு காரணம் ஐ லவ் யூ படத்தில் இடம்பெற்ற மாட்டனாடி மாயவடே என்ற பாடல் காட்சி. அதற்கு முன்பு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்காத ரச்சிதா இந்தப் பாடலில் உபேந்திராவுடன் மிக நெருக்கமாகவும் கவர்ச்சியாகவும் நடித்தார். இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியது.

குடும்பப் பிரச்சினைகள்
ரச்சிதாவின் குடும்பத்தினர் இந்தப் பாடலை ரசிக்கவில்லை. இது அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் அவர் தனது சொந்த வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார் என்று கூட கூறப்படுகிறது. பின்னர் ஒரு பேட்டியில் அந்தப் பாடல் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்தும் தனது பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது குறித்தும் கண்ணீருடன் பகிர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications