Coolie: கூலி ரிலீஸ் நாளில் ரஜினிகாந்த் செய்ய போகும் சம்பவம்! இவரால் மட்டும் எப்படி இப்படி முடியுது
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்த பரபரப்பான சூழலில், 'கூலி' வெளியாகும் அன்று ரஜினிகாந்த் எங்கு இருப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் அன்றைய தினம் தனது அடுத்த படத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
கூலி - ரஜினியும் லோகேஷும் இணைந்த சிறப்பு
'கூலி' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' படத்தின் மூலம் ஒரு தரமான வெற்றியைப் பரிசளித்தார். அதேபோன்று, ரஜினிக்கும் ஒரு தரமான சம்பவத்தைச் செய்வார் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இதில் அவருடன் சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான மூன்று சிங்கிள் பாடல்களில், 'மோனிகா' மற்றும் 'பவர் ஹவுஸ்' பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

நாளை ஆடியோ வெளியீட்டு விழா
படத்தின் ட்ரெய்லரும், ஆடியோ வெளியீட்டு விழாவும் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் அனிருத்தின் பெர்ஃபார்மென்ஸும் இருக்கும் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். மேலும், லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், "நான் ஒரு கமல்ஹாசன் ரசிகர் என்று ரஜினியிடம் சொன்னபோது, அவர், 'இசை வெளியீட்டு விழாவில் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று வேடிக்கையாகச் சொன்னார்," என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, நாளை ரஜினியின் பேச்சிலும், வேடிக்கையான சம்பவங்களும் அதிகமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூலி ரிலீஸ் நாளில் ஜெயிலர் 2 ஷூட்டிங்
'கூலி' திரைப்படம் ரிலீசாகும் நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினிகாந்த் என்ன செய்வார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங்கில் அன்றைய தினம் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்த வயதிலும், ஒரு படம் ரிலீசாகும் நாளில் இன்னொரு படத்தின் வேலையில் ஈடுபடும் ரஜினியின் இந்த முடிவு, அவரது கடின உழைப்பையும், தொழிலின் மீதான அர்ப்பணிப்பையும் காட்டுகிறது. இது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் அளித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications