Coolie vs War 2 Box Office: கூலி Vs வார் 2 பாக்ஸ் ஆபிஸ் போரில் வென்றது யார்? 18-வது நாள் வசூல் இவ்வளவுதானா?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த 'வார் 2' ஆகிய இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை ஏற்படுத்தின. 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலி படத்தின் பிரம்மாண்ட வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'கூலி', ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. படம் வெளியான முதல் நாளே ₹65 கோடியை வசூலித்து, ரஜினிகாந்த் படங்களிலேயே மிகப்பெரிய தொடக்கத்தை அடைந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் யாரும் எதிர் பார்க்காத அளவிற்கு வசூல் குறைய தொடங்கி விட்டது. இந்த திரைப்படத்திற்கு வசூல் குறைவதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது ஒரு காரணமாக இருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வரவேற்கப்பட்ட இந்த திரைப்படம் பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. இதன் காரணமாக படிப்படியாக வசூல் குறைந்து கொண்டிருக்கிறது.
18-வது நாள் வசூல்: 'கூலி' திரைப்படம் அதன் 18-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ₹3 கோடியை வசூலித்துள்ளது. இது சனிக்கிழமை வசூலான ₹2.8 கோடியை விட சற்று அதிகம். இதுவரை இந்திய அளவில் 'கூலி' திரைப்படம் ₹279 கோடியை வசூல் செய்துள்ளது. இந்த வசூல், ரஜினிகாந்தின் முந்தைய படமான 'ஜெயிலர்' படத்தின் மொத்த வசூலான ₹349 கோடியை நெருங்கி வருகிறது.
வார் 2 படத்தின் வசூல் நிலவரம்
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்த 'வார் 2' திரைப்படம், முதல் சில நாட்களில் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோகமான தொடக்கத்தை அடைந்தது. ஆனால், மூன்றாவது வாரத்தில் அதன் வசூல் கடுமையாகக் குறைந்துள்ளது.
18-வது நாள் வசூல்:
'வார் 2' திரைப்படம் அதன் 18-வது நாளில் ₹1 கோடிக்கும் குறைவாகவே (சுமார் ₹0.98 கோடி) வசூலித்துள்ளது. இந்த 18 நாட்களில், 'வார் 2' இந்திய அளவில் சுமார் ₹234.03 கோடிகளை வசூலித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் முடிவுகள்
ஒரே நாளில் வெளியான இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரத்தைப் பார்க்கும்போது, 'கூலி' திரைப்படம் ₹279 கோடி வசூலுடன், 'வார் 2' படமான ₹234.03 கோடியை விட முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், ரஜினிகாந்த் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகத் திகழ்கிறார் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications