Coolie vs war 2 box office collection: கூலி, வார் 2 ஒன்பதாவது நாள் வசூல் எவ்வளவு? ரேஸில் No.1 யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் கூலி, ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் எந்த படம் 9ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ஹிட்டடித்தது என்பதை பார்க்கலாம். மேலும் இரு படங்களின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் 172 ஆவது படமான கூலி, கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

television coolie war 2 2

அது போல் அது போல் ரித்திக் ரோஷனின் வார் 2 என்ற இந்தி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. இந்த இரு படங்களும் பெரிய ஸ்டார்டாம் படங்கள் என்பதால் எந்த படத்தின் கலெக்ஷென் அதிக வசூலை படைத்தது என்பதை பார்க்கலாம்.

கூலி - வார் 2

கூலியும், வார் 2 படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை் எவ்வளவு பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் Sacnilk என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது.

4 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இரண்டாவது நாள் கூலி 54 கோடி வசூலை குவித்துள்ளது. அதே போல் வார் 2 படம் ரூ 57 கோடியை பெற்றது. மூன்றாவது நாளான நேற்று கூலி திரைப்படம் இந்தியளவில் 38.5 கோடி வசூலை பெற்றது. ஆனால் வார் 2 படம் ரூ 33 கோடிதான் பெற்றது. எனவே கடந்த 3 நாட்களில் வார் 2 படம் மொத்தமாக ரூ. 142 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் கூலி திரைப்படமோ 3 நாட்களிலும் மொத்தமாக ரூ 158.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 4ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று கூலி படம் ரூ 35.25 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. வார் 2 திரைப்படமானது ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ. 31.3 கோடியாகும்.

9ஆவது நாள் வசூல்

5ஆவது நாள் வசூல் இரு படங்களுக்கும் குறைந்திருந்தாலும் திங்கள்கிழமையில் இது அதிகம்தான் என்கிறார்கள். அந்த வகையில் கூலி படம் ரூ 8.37 கோடியும் , வார் 2 படம் ரூ 6.66 கோடியும் வசூலானது. அது போல் 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று கூலி படம் ரூ 9.50 கோடியும் வார் 2 படம் ரூ. 8.25 கோடியும் வசூலித்தது. 7 ஆவது நாளான புதன்கிழமை 7.5 கோடியும் 8ஆவது நாளாந வியாழக்கிழமை ரூ6.25 கோடியும் வசூலை குவித்தது.அது போல் வார் 2 படம் 8ஆவது நாளில் ரூ 5 கோடி மட்டுமே வசூலை அள்ளியது. 9ஆவது நாளில் கூலி படம் ரூ 5.50 கோடியும் வார் 2 படம் ரூ 4 கோடியும் வசூலானது.

கூலி, வார் 2 மொத்த வசூல்

கூலியை வார் 2 படம் முந்தும் என வடஇந்திய ரசிகர்கள் விரும்பினர். 8 நாட்களில் கூலி படம் மொத்தம் ரூ 235 கோடியையும் வார் 2 படம் 208 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+