Web Series: கொரோனாவில் பிழைச்சவன் இருக்கான்.. பொண்டாட்டி பேச்சை கேட்காதவன்...?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவைரஸ் தாக்கம் வெப் சீரிஸையும் விட்டு வைக்கவில்லை...சின்னத்திரை சீரியல்களில் கொரோனாவைரஸ் குறித்த டயலாக் கடந்த இரண்டு நாட்களாக இடம் பெற்று வருகிறது.

வாட்சாப் நகைச்சுவைகளில் கொரோனாவைரஸ்.. கொரோனா மீம்ஸ்..இப்படி எல்லாவற்றிலும் இருக்கிறது கொரோனாவைரஸ்.

கால்கட்டு வெப்சீரீஸில் கடைசியில் கொரோனாவைரஸ் க்கு பொண்டாட்டியை உசத்தி வச்சு ஒரு டயலாக் வருது. இதில் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா நடிச்சு இருக்கார்.

 கணவன் மனைவி

கணவன் மனைவி

கணவன் மனைவி இளம்ஜோடி.. இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று இருப்பவர்கள். வீடு சுத்தமா இருக்கணும் இருக்கணும்னு சொல்லிகிட்டே இருக்கும் ஐஸ்வர்யா... எப்போதும் வீட்டை அலங்கோலமாக ஆக்கிவிடும் சிவா. ஏண்டா எத்தனை முறை சொல்றது வீட்டை சுத்தமாவே வச்சுக்க மாட்டியான்னு சத்தம் போடுகிறாள் ஐஸ்வர்யா.

 கூல் பேபி

கூல் பேபி

கூல் பேபி.. சுத்தம் செய்துக்கலாம் எதுக்கு இப்படி சத்தம் போடறேன்னு கேட்டு மறுபடியும் அதை அதை அப்படி அப்படியே போட்டு வைக்கிறான் சிவா. சாப்பிட்ட டைனிங் டேபிளில் அனைத்தும் அப்படி அப்படியே கிடக்க தூக்கம் வருதுன்னு கொட்டாவி விட்டுட்டான். எமோஷன் காண்பிச்சு.. பெருமூச்சு விட்டு ஐஸ்வர்யாவால் நிக்கத்தான் முடியுது.. இந்த அலும்பு பிடிச்ச பயல்கிட்டே.. வேறென்னத்தை செய்வாள்...

 பெட்டில் ஈரத் துண்டு

பெட்டில் ஈரத் துண்டு

சிவா.. எத்தனை தடவை சொல்றது பெட்டில் ஈரத் தூண்டை அப்படியே போட்டு வைக்காதேன்னு.. உனக்கு புரியாதா? வீட்டை சுத்தமாவே வச்சுக்க மாட்டியான்னு கேட்கிறாள். இதோ பேபி வரேன்னு சொல்லிட்டு போனவன், இப்போது ஆஃபீஸுக்கு டைமாச்சு பேபின்னு கிளம்பிட்டான்.

 பென்ட்ரைவ் காணோம்

பென்ட்ரைவ் காணோம்

ஆ ஃபீசில் டீம் லீடர் நிக்க வச்சு கத்தறான். அந்த பென்ட்ரைவ் நம்ம டீமோட ஒரு வார உழைப்பு. இது போச்சுன்னா அவ்ளோதான். காலையில் வரும்போது பென்ட்ரைவோட வாங்க.. இல்லேன்னா நீங்க வராதீங்கன்னு அனுப்பிட்டான் டீம் லீடர். கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டு.. இப்படி படுத்தி வைக்கறானேன்னு மனசுக்குள்தான் திட்ட முடியுது

 தேடினாலும் கிடைக்கலை

தேடினாலும் கிடைக்கலை

வீட்டுக்கு வந்து குப்புறப்படுத்து தேடியும் பென்ட்ரைவ் கிடைக்கலை. அப்போதுதான் ஐஸ்வர்யா என்ன சிவா தேடறேன்னு கேட்கிறாள். ஒண்ணுமில்லை என் சார்ஜர் என்று இழுக்க..சார்ஜரா.. இதுவா பாருன்னு பென்ட்ரைவை காண்பிக்கிறாள். தெய்வமே இதுதான்னு வாங்கிகிட்டு சிவாவிடம்.. இதுக்குத்தான் சிவா.. வீட்டை மியூசியம் மாதிரி வைக்கலேன்னாலும்.. வச்சதை வச்ச இடத்திலிருந்தே எடுக்கற மாதிரியாவது வீட்டை சுத்தமா வச்சுக்கணும்னு சொல்றா.

அதுக்கு சிவா சொல்றான்.. தெரியுது பொண்டாட்டி.. கொரோனாவில் கூட பிழைச்சவன் இருக்கான்.. பொண்டாட்டி பேச்சை கேட்காதவன் ரத்தம் கக்கி சாவான் என்று.

சோ சிம்பிள் கான்செப்ட்...சோ சிம்பிள் டயலாக்ஸ்...தட்ஸ் ஆல் வெப்சீரீஸ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+