ஸ்ருதியுடன் ஒரே ஒரு நாள் வெளியே வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! அதுக்குள்ள இரண்டாவது மனைவி செய்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி இருந்தும் இன்னொரு திருமணம் செய்தாலும்கூட, முதல் மனைவியை துன்புறுத்தினால் மட்டும்தான் அது குற்றமாக பார்க்கப்படும்.. ஆனால், என் கணவர் என்னிடம்தான் உள்ளார் என்று ஸ்ருதி சொல்லும்போது, இரண்டாவது திருமணத்துக்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றே அர்த்தமாகிறது.. எனவே, மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் பற்றி பேச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிறிஸ்டில்லா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக சில போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டதுடன் மேலும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Television Madhampatty Rangaraj Costly cook

உடனே அவரது மனைவி ஸ்ருதி, தான் இப்போதும் மாதம்பட்டி ரங்கராஜின் அதிகாரப்பூர்வ மனைவி என்று பதிலடி தந்திருந்தார்.. இதையடுத்து, விவாகரத்து பெறுவதற்கு முன்பே இன்னொரு திருமணம் செய்து கொண்டாரா? என்று மாதம்பட்டி ரங்கராஜ் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் ஆளானார்.

தனித்தனி கார்கள்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜும் முதல் மனைவி ஸ்ருதியும் நேற்று ஒன்றாக கலந்து கொண்டது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.. இருவரும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.. இருவரும் பேசிக் கொள்ளவுமில்லை. இருவரும் தனித்தனி கார்களில் வந்திருந்தனர்.

விழாவில் நடப்பவற்றை இருவருமே கவனித்து கொண்டிருந்தனர்.. இந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியிருந்தன.. ஒருவேளை விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதற்காக இருவரும் தனித்தனியாக வந்து பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது..

உடனே அடுத்த சிலமணி நேரங்களிலேயே ஜாய் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் மருத்துவமனைக்கு செக் அப்புக்கு சென்றபோது எடுத்த போட்டோவை பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மருத்துவமனையில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்துடன், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு இபபோது பெயர் சூட்டியும் இருக்கிறார். அதற்கு ராஹா ரங்கராஜ் என பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் மனைவி ஸ்ருதி

இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், இரண்டாவது கல்யாணத்தை செய்துக்கிட்டு, மனைவியை ஒதுக்கிவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், வீட்டில் ராமன், வெளியில் கிருஷ்ணன் என்பதுபோலதான் நடந்து வருகிறார்

மனைவி, குழந்தைகள் என்ற விஷயத்தில் குடும்ப தலைவன் என்ற ரோலை சரியாக செய்து வருகிறார்.. வீட்டை விட்டு வெளியே வந்தால், அவருக்கான செல்வாக்கு, பிரபலமான நபராகிவிடுகிறார்.. சமூகத்துக்கேற்றபடி வாழ வேண்டியிருக்கிறது.

என் கணவர் என்னிடம்தான் உள்ளார், என் குழந்தைகள் என்னுடன்தான் இருக்கிறார்கள் என்பதுபோல ஏற்கனவே முதல் மனைவி ஸ்ருதி கூறியிருந்தார்..

ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ், மிகப்பெரிய காஸ்ட்லியான சமையல் நிபுணர்.. பலபேருக்கு பைனாஸ் செய்யும் அளவுக்கு பணம் வைத்திருப்பவர்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோதும், சில நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.. ஆனால், இதனை மறுத்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ், அவதூறு கிளப்புவர்கள் மீது வழக்கு தொடுக்கப் போவதாக கூறி, நடவடிக்கையும் எடுத்திருந்தார்..

6 மாத கர்ப்பம்

அவ்வளவு பேசிய ரங்கராஜ், காஸ்ட்யூம் டிசைனருடன் பழக்கமானார்.. இருவரும் காதலித்துள்ளனர்.. அவருடனே வாழ முடிவுசெய்துதான், தன்னுடைய கணவரை ஜாய் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இப்போது மாதம்பட்டியுடன் திருமணம் முடிந்துவிட்டதாகவும், தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி, வெளிப்படையாகவே போட்டோக்களையும் பதிவிட்டுவிட்டார் ஜாய்.

தன்னை திருமணம் செய்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிவிக்க போவதில்லை என்பதுதெரிந்துதான், இந்த போட்டோக்களை எல்லாம் பொதுவெளியில் பதிவிட்டுவிட்டார்.. இதனால் இரண்டாவது மனைவிக்கும் வீடு, வாசல், சொத்துக்களை தர வேண்டிய அவசியம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இன்று வந்துள்ளது.

முதல் மனைவிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறக்க போகிறது.. எனவே சொத்துக்களை தர வேண்டிய தேவையும் எழுந்துள்ளது..

இரண்டாவது திருமணம்

எனினும் ஜாய் பதிவிட்டது பற்றி, இதுவரை இந்த விஷயத்துக்கு ஆதரவோ, மறுப்போ எதுவுமே மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவிக்கவில்லை.

மனைவி இருந்தும் இன்னொரு திருமணம் செய்தாலும்கூட, முதல் மனைவியை துன்புறுத்தினால் மட்டும்தான் அது குற்றமாக பார்க்கப்படும்.. அந்த விவகாரம் பொதுவெளியிலும் பேசப்படும்.. ஆனால், என் கணவர் என்னிடம்தான் உள்ளார் என்று ஸ்ருதி சொல்லும்போது, இரண்டாவது திருமணத்துக்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றே அர்த்தமாகிறது.. எனவே, இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை..

விவிஐபி மாதம்பட்டி ரங்கராஜ்

விவிஐபி என்பதால் மாதம்பட்டி ரங்கராஜ் எது செய்தாலும் அது பரபரப்பாக பேசப்படவே செய்யும்.. எப்போதுமே தம்பதிகளாக இருப்பவர்கள், சில முக்கியமான வீடுகள், குடும்பங்களுக்கு சேர்ந்துதான் போக வேண்டியிருக்கும்..

அந்தவகையில், ரங்கராஜின் வற்புறுத்தலினால்கூட நேற்றைய விழாவுக்கு ஸ்ருதி வந்திருக்கலாம்.. ஆனால், முகத்தைகூட பார்க்கவில்லை, பேசவில்லை.. இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார்.. ஒருவேளை போட்டோக்கள் அதுபோல எடுக்கப்பட்டு வெளிவந்ததா? தெரியவில்லை..

எப்படிப் பார்த்தாலும், அவர்களுக்குள் பனிப்போர் இருக்கவே செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+