ரீல்ஸில் எல்லை மீறும் தம்பதிகள்.. கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து காட்டுவது தான் சாதனையா?
சென்னை: சில வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து திருமணம் செய்தவர்கள் திருமணத்திற்கு பிறகு தாங்கள் செய்த சாதனையை அனைவரிடமும் பகிர்வார்கள். அதிலும் புது வீடு கட்டி விட்டோம், புது கார் வாங்கி இருக்கிறோம், தொழில் ஆரம்பிச்சுட்டோம் என்று தங்களுடைய முன்னேற்றத்தை வீடியோவாக போடுவார்கள். ஆனால் இப்போ சோசியல் மீடியாவில் கல்யாணம் முடிந்ததும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயத்தையே சாதனையாக சோசியல் மீடியாவில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
Finally we are married.. my dream completed.. என்ற ஹேஸ் டேக் உடன் கல்யாணம் முடிந்ததும் கணவன் மனைவி இருவரும் ஒரு ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு அங்கு கேமராவை தங்களுக்கு தெரிகிற மாதிரி ஒரு பொசிஷனல் வைத்துக்கொண்டு கட்டிபிடிப்பது, முத்தம் கொடுப்பதும், ஆரத்தழுவி சரசமாடுவதை அப்படியே வீடியோவாக எடுத்து அதை ரீல்ஸில் வெளியிடுகிறார்கள். இது என்ன மாற்றம் என்பது அனைவருக்கும் கேள்வியாக இருக்கிறது.

தம்பதிகளில் கட்டிப்பிடி வீடியோக்கள்
ஒரு சிலர் இதை ரசித்தபடியே அடுத்த கட்டமாக நடக்கும் விஷயத்தையும் வீடியோவாக வெளியிடுவீங்களா? என்று ஆர்வத்தோடு கேட்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எதிர்காலத்தை நினைத்து பயமாக இருப்பதாக 80ஸ், 90'ஸ் கிட்ஸ்கள் பதறி கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. கல்யாணம் முடிந்துவிட்டால் கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது இயற்கை ஆனால் அதை சோசியல் மீடியாவில் காட்டி நாங்கள் சாதிச்சிட்டோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

கேமரா ஆங்கிள்
அதிலும் எல்லோரும் சொல்லி வைத்தது போல ரூமுக்குள் வரும்போது கதவை பூட்டுகிறார்கள். உள்ளே மட்டும் கேமரா வைத்து வீடியோ எடுத்து அதை லட்சக்கணக்கானோர் பார்க்க ஷேர் செய்கிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை? ஒரு தம்பதிக்கு கல்யாணம் முடிந்து விட்டால் இதுதான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இவர்கள் கதவை பூட்டிக் கொண்டு அந்தரங்கமாக செய்ய வேண்டிய விஷயத்தை ரீல்ஸில் வெளியிடுவதால் அடுத்தவர்களின் கற்பனைக்கு தீனி போடுகிறார்கள். அல்லது அடுத்தவர்களின் உணர்வுகளை தூண்டி அதில் லைக் வாங்க துடிக்கிறார்களா? என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்விகளாக இருக்கிறது.

தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் எல்லாமே கேமரா முன்பு காட்டுவதில் என்ன காதல் இருக்கிறது? இப்போது வெளியாகும் வீடியோக்களை பார்த்தால் கல்யாணம் செய்து கொண்டதே ஒரு சாதனை. அதற்கு அடுத்த சாதனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தோம் என்று உலகத்திற்கே அறிவிப்பது மாதிரி ஆகிவிட்டது. இப்போது ஒருவர் அல்ல, இருவர் அல்ல ஆயிரக்கணக்கானோர் இதை ஒரு ட்ரெண்ட் போல ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவது தனி கலாச்சாரமாக மாறிவிட்டது.
உண்மையான காதல் இதுதான்
இங்கே நாம சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம், உங்கள் காதல் உண்மையானது என்றால் அதை நிரூபிக்க இன்ஸ்டாகிராம் சாட்சியம் தேவையில்லை. கணவன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது மனைவி சாப்பாடு கொடுப்பது, மனைவி உடம்பு சரியில்லாத போது கணவன் பார்த்துக் கொள்வது, கஷ்டமான நேரங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது, பணமில்லாத காலத்திலும் சேர்ந்து வாழ்க்கையை நடத்துவது இவைதான் உண்மையான ரிலேஷன்ஷிப் கோல்.

கதவை பூட்டிக்கொண்டு இரண்டு பேர் கட்டிப்பிடித்துக் கொள்வதை அடுத்தவர்களிடம் காட்டுவதை விட வாழ்க்கை முழுவதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதுதான் பெரிய சாதனை. நாம் கட்டிப்பிடி பிடிக்கும் போது கூட அடுத்தவர்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தால் நம்ம பீலிங் அவர்களுக்கு சரியாக தெரியும்? என்று சிலர் கேமராவை அங்கே இங்கே மாற்றி வைத்து கட்டி பிடிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

பிறகு கஷ்டப்படுவீங்க
இணையத்தில் ஒருமுறை போன தனிப்பட்ட தருணத்தை முழுமையாக மீண்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இப்போதும் சுலபம் அல்ல. ஆனால் ஒரு சிலர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோவை பார்க்கும் விஷமிகள் அதை இன்னும் மோசமாக எடிட் செய்து சோசியல் மீடியாவில் வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கஷ்டம் காதலுக்கு இஷ்டம்.. 4வது விமானம்.. சோசியல் மீடியாவை அதிரவிடும் தம்பதி.. புலம்பும் நெட்டிசன்கள்
திருமண வாழ்க்கையில் மிக அழகான தருணங்கள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றில் உலகத்துக்கே காட்டாமல் இது எங்களுக்கு மட்டும் என்று வைத்துக் கொள்ளும் போது தான் அந்த தருணத்திற்கு இன்னும் ஒரு மதிப்பு வரும். இல்லையென்றால் நாளைக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் ரீல்ஸாக போட்டேன் லைக் வந்தது, ஆனால் வாழ்க்கையில் என்ன மிஞ்சியது? என்று யோசிக்க வேண்டிய நிலை வரக்கூடாது. அதனால் காதல் கண்டண்ட் இல்லை... அது ஒரு வாழ்க்கை பாதை.. அதில் வாழ்வதில் தான் அழகு.. ஒவ்வொரு நொடியும் ரிலீஸ் ஆக மாற்றுவதில் இல்லை.


Click it and Unblock the Notifications
