குக் வித் கோமாளி வந்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள்.. யார் அவர்கள்?.. நிகழ்ச்சியில் என்ன செய்தார்கள்?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த கிரிக்கெட் வீரர்கள். யார் அந்த வீரர்கள் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். அவ்வப்போது சிறப்பு அழைப்பாளர்களையும் அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்துவிட்டன.

தற்போது 4-ஆவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் கிஷோர், காளையன்,ராஜ் அய்யப்பன், விஷால், ஷெரின், கஜேஷ் ஆகியோர் இதுவரை நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்கள். தற்போது மற்ற போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில் விசித்திரா, மைம் கோபி, ஷிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, கிரண், ஆன்ட்ரியா ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஏற்கெனவே எலிமினேட் ஆனவர்கள் வருவார்கள். அவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மேற்கண்டவர்களுடன் போட்டி நடைபெறும் என தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது நிகழும் எபிசோடில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் குக் வித் கோமாளி ஷோவிற்குள் வந்துள்ளனர். அது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சக்கரவர்த்தி அருண் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் வந்துள்ளார்கள். இவர்கள் இருவருமே ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியவர்கள்.
இவர்ளில் வெங்கடேஷ் அய்யர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். அது போல் வருண் சக்கரவர்த்தி தமிழக அணிக்காக விளையாடுகிறார். வருண் சென்னையைச் சேர்ந்தவர். செயிண்ட் பாட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே கிரிக்கெட் விளையாடியவர். அவர் எஸ்ஆர்எம் கல்லூரியில் பட்டம் படித்தார். வெங்கடேஷ் அய்யர் சிஏ இன்டர்மீடியேட் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் எம்பிஏ படிப்பில் சேர்ந்து அதில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து சவுராஷ்டிரா கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இவர் ஒரு ஆல் ரவுண்டர். இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர்கள் இருவரும் குக் வித் கோமாளி செட்டிற்குள் வந்துள்ளனர். இங்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் , ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார்களா என்பதெல்லாம் இனிதான் தெரியும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications