குக்கூ பட நடிகரின் அவல நிலை.. தங்க இடம் இல்லாமல் ரோட்டோரத்தில் தவிப்பு.. கண்ணீரோடு பேட்டி
சென்னை: குக்கூ திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் இளங்கோ தங்கும் ரூமிற்கு வாடகை கொடுக்க முடியாததால் பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் அவல நிலையில் இருக்கிறார்.
மாற்றுத்திறனாளியான நடிகர் இளங்கோ தன்னுடைய குடும்பத்தினர் தன்னை வீட்டை விட்டு விரட்டியதால் பாட்டு பாடி ரோட்டோரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அது குறித்து நடிகர் இளங்கோ பிரபல சேனல் ஒன்றில் தன்னுடைய சோகத்தை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு குக்கூ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு முன்பு ராஜமுருகன் ஜோக்கர் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த நிலையில் குக்கூ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார்.
கதாநாயகியாக மாளவிகா நாயர் அதைத் தொடர்ந்து ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம், இளங்கோ, நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று இருந்தது. படத்தின் கதை மட்டுமல்லாமல் பாடல்களும் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தது.
அதுபோல குக்கூ திரைப்படத்தில் திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவருக்குமே பார்வை இல்லாத கேரக்டராக வாழ்ந்திருந்தனர். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு நண்பனாக நடித்து இருந்தவர் தான் இளங்கோவன். இவர் படம் முழுக்க கதாநாயகனோடு பயணித்து இருப்பார். கதாநாயகனுக்கு அடுத்ததாக இவருடைய கேரக்டர் தான் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.
படத்தில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் இவர் கண் பார்வை அற்ற மாற்றுத்திறனாளி தான். இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு பரிதாபமான நிலையில் இளங்கோ பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் தான். அங்கு தான் குடும்பத்தினர் எல்லோருமே இருக்கின்றனர். நான் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் 2019 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து விட்டேன்.
சென்னையில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்தேன். பிறகு பாட்டு பாடி அதில் வரும் பணத்தை வைத்து என்னுடைய பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறேன். குக்கூ பட இயக்குனர் மூலமாகத்தான் எனக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்துக்கு பிறகு எனக்கு எந்த படமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் என்னால் வாய்ப்பு தேடி அலைய முடியவில்லை. அதனால் நான் வழக்கம் போல என்னுடைய பாட்டு தொழில் மூலமாக நான் பிழைப்பை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போதான் கொரோனா காலகட்டம் வந்தது. அந்த சமயத்தில் ஊரடங்கு நேரத்தில் வயிற்று பிழைப்புக்கு ரொம்பவே கஷ்டமானது. வெளியே செல்ல முடியாத காரணத்தால் ஒருவேளை சாப்பாட்டுக்கெல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். அதனால் என்னால் ரூமிற்கு வாடகை கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி பிளாட்பாரத்தில் வந்து தங்கி இருக்கிறேன்.
இப்போ பிளாட்பாரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இங்கு இருக்கும் சுரங்கப்பாதையில் தான் தங்கியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் குக்கூ இளங்கோ பேசி இருக்கிறார். ஒரு பெரிய பாடகராக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளங்கோ பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் மூலம் இவருடைய எதிர்காலம் மாறுமா? இவருக்கு யாராவது உதவி செய்வார்களா? என்று இனிவரும் காலங்களில் தான் தெரியும்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்











Click it and Unblock the Notifications