இவ்வளவு கேவலமாக பண்ணுறீங்களே.. நடந்தது இதுதான்! CWC திவாகர் பிரச்சனைக்கு அறந்தாங்கி நிஷா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சுற்றில் உருவான சர்ச்சை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இடையே தொடங்கிய குற்றச்சாட்டு விவகாரம், இப்போது அறந்தாங்கி நிஷா வரை சென்று பெரிய விவாதமாக மாறியுள்ளது. அதாவது அறந்தாங்கி நிஷாவின் பழைய வீடியோவால் புது சர்ச்சை உருவாகி இருக்கிறது. இதுகுறித்து அறந்தாங்கி நிஷா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Cook With Comali Aranthangi Nisha Divakar

திவாகரின் குற்றச்சாட்டு

கொக்கு விட்டு கோமாளி சூட்டிங் போன இடத்தில் தன்னை இரும்பு கம்பியால் அடித்து விட்டதாக அப்போ திவாகர் போலீசில் புகார் கொடுத்தது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் என பலர் சேர்ந்து என்னை அடிச்சிட்டாங்க.. ஆபாசமாக பேசினாங்க, அதிலும் மாகாபா குடித்துவிட்டு என்னை அடித்தார் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகளை திவாகர் சொல்லி இருந்தார்.

மாகாபா ஆனந்தின் பதில்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மாகாபா ஆனந்த், திவாகரின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்தார். அதோடு திவாகர் மீது தான் தப்பு என அவரும் ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருந்தார். அதாவது நிகழ்ச்சி சூட்டிங் ஸ்பாட்டில், ஒரு போட்டியாளரின் மனைவியின் தோள் மீது கை போட்டு கொண்டு நீ இத்தனை வருஷம் உன் புருஷன் கூட வாழ்ந்துட்ட ஒரு நாள் மட்டும் என் கூட வந்து பாரு என்று மோசமாக பேசுகிறார், அது தப்பு இல்லையா என்று மாகாபா கேள்வி கேட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டு வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் ஆதரவும் இருபுறமும் எழ ஆரம்பித்தது.

கானா வினோத்தின் விளக்கம்

இந்த நிலையில், கானா வினோத்தும் இது குறித்து விளக்கம் கொடுத்தார். அப்போது திவாகர் முழுக்க முழுக்க ஜாதி பார்த்து பேசுகிறார். என்னை குப்பம் சேரின்னு திட்டுகிறார் என்று அவரும் திவாகர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

நிஷா பெயர் இழுக்கப்பட்டதால் ஏற்பட்ட திருப்பம்

இந்த சர்ச்சை நடந்து கொண்டிருக்கும்போது, அறந்தாங்கி நிஷாவின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டது. ஒரு யூடியூப் சேனல், நிஷாவின் பழைய வீடியோவை தற்போதைய பிரச்சனையுடன் இணைத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுவே இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டதாக நிஷா அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

நிஷாவின் பதில்

சமீபத்தில் ஒரு பதிவுக்கு கீழே நிஷா கோபமாக கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதில், எவ்வளவு கேவலமா பண்றீங்க, இந்த வீடியோ நான் ஒரு பெண்ணுக்காக பேசின வீடியோ. அதை எடுத்து இப்ப போட்டு கேவலமா பண்றீங்க, இதற்கு கேவலமா கமெண்ட் பண்ணுன, எல்லா சகோதரர்களுக்கும் நன்றி.

மேலும், நிகழ்ச்சி செட்டில் நடந்த சண்டை என்பது கானா வினோத்துக்கும் திவாகருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட வாக்குவாதம் மட்டுமே என்றும், அதில் தன் பெயரை இழுத்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார்.

தன்னுடைய பெயரையும், பேசிய கருத்துகளையும் தவறாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அவரின் இந்த பதில், இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

திவாகரின் புதிய முயற்சி

நிஷா கூறிய இந்த விளக்கத்தை ஆதாரமாக காட்டி, என் மேல தப்பே இல்லை என்று திவாகர் பேசி வருகிறார்.தான் நிஷாவிடம் எந்த விதத்திலும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றாகவே இந்த கருத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+