விருதுநகர் சிறையிலிருந்து வெளியே வந்த குக் வித் கோமாளி புகழ்! ஏன் என்னாச்சு? பரிதவிக்கும் ரசிகர்கள்
சென்னை: சிறையிலிருந்து விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் வெளியே வருவது போன்று வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் என்னாச்சோ ஏதாச்சோ என கிடந்து தவிக்கிறார்கள்.
Recommended Video
கலக்க போவது யார் எனும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் பெண் குரலில் வந்து புகழ் அசத்துவார். இவரது ரோல் அனைவருக்கும் பயங்கர சிரிப்பை வரவழைக்கும்.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குக் வித் கோமாளி எனும் ஷோவுக்கு வந்தார். அதில் மக்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை போட்டு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார். புகழின் பாடி லேங்வேஜ் அனைவருக்கும் பிடிக்கும்.

வலிமை படம்
இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். வலிமை படத்தில் சிறிய ரோலாக இருந்தாலும் நன்கு பேசப்பட்டார் புகழ். குக் வித் கோமாளியில் இரு சீசன்களில் கலக்கிய புகழ் 3ஆவது சீசனுக்கு சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வருகை தருகிறார். இவரது காமெடியை பார்த்து தனது தாய் உடல்நிலை தேறி வருவதாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் கூறியதை உருக்கமாக வெளியிட்டார்.

சினிமா செட்
விஜய் டிவி செட், சினிமா செட் என பிஸியாக நடித்து கொண்டிருக்கும் புகழ், மிஸ்டர் ஜூ கீப்பர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் புகழ் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

புகழ்
அந்த வீடியோவில் புகழ் சிறையிலிருந்து வெளியே வருகிறார். அப்போது நாயகன் மீண்டும் வர்ரார் எனும் விக்ரம் பாடல் ஒலிக்கிறது. ஏதோ பனியனை போட்டபடியே வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏன் எதற்காக புகழ் சிறைக்கு சென்றுள்ளார் என வினவி வருகிறார்கள்.

சிறையிலிருந்து வரும் வீடியோ
ஆனால் இந்த வீடியோவின் கீழே ஷூட்டிங் ஸ்பாட் என புகழ் குறிப்பிட்டுள்ளதை பெரும்பாலானோர் பார்க்கவில்லை போலும். நல்ல வேளையாக புகழே விளக்கிவிட்டார். எந்த படத்தின் ஷூட்டிங் என தெரியவில்லை. அதிலும் விருதுநகர் மாவட்ட சிறை என போடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications