OTT: பாலகிருஷ்ணா பலே ஆள்தான்.. ரிலீசான கையோடு நெட்பிளிக்சில் டாப் 1 இடம் பிடித்த "டாக்கூ மஹாராஜ்"
சென்னை: "ஆயிரம்தான் சொல்லுங்க, மசால் வடை, மசால்வடைதான்யா.." என்பதை போல, நாம் என்னதான் நக்கலாக சிரித்தாலும், நந்தமுரி பாலகிருஷ்ணா (Nandamuri Balakrishna) படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்டுகளை படைத்துதான் வருகிறது. "தெலுங்கு ரசிகர்களே அப்படித்தான் பாஸ், லாஜிக்கெல்லாம் பார்க்க மாட்டாங்கன்னு.." நீங்க நினைச்சா அதுவும் தப்பு. ஓடிடிக்கு வந்த பிறகுதான், அனைத்து மொழி மக்களும் பார்த்த பிறகும்தான், பாலகிருஷ்ணா படம் டாப் 1 இடத்தில்தான் உள்ளது. ஆம், டாக்கூ மஹாராஜ் (Daaku Maharaaj) படத்தை பற்றிதான் பேசுகிறோம்.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த அதிரடி ஆக்ஷன் (!!) திரைப்படமான 'டாக்கூ மஹாராஜ்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. பிப்ரவரி 21 அன்று Netflix-ல் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சம்பல் பள்ளத்தாக்கில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, நிலவுடமை ஜமீன்தாரின் கொடுமை, எதிர்த்து கிளத்து எழும்பும் கிளர்ச்சிப் படை என செல்லும் இந்த கதையில், தங்கை சென்டிமென்ட், குழந்தை சென்டிமென்ட், கவர்ச்சி ஆட்டம் என கலந்து கொடுக்கப்பட்டிருந்தது. அடிக்கடி தன்னைத்தானே சிங்கம் என பாலகிருஷ்ணா சொல்வது சிரிப்பு வரவழைக்கும் என்றபோதிலும், பல முறை அடி வாங்கி, வெட்டு வாங்கியும் அசால்டாக எதிரிகளை பந்தாடும் பாலகிருஷ்ணா கதாப்பாத்திரத்திற்கு இந்த பில்ட்அப் அவசியம்தான் எனவும் தோனவைத்துவிட்டது.

இந்த நிலையில்தான், Netflix இந்தியா ட்ரெண்டிங்கில் 'டாக்கூ மஹாராஜ்' முதலிடத்தில் உள்ளது. பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 'டாக்கூ மஹாராஜ்' இன்னும் சில வாரங்களுக்கு இந்த இடத்தை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபி கொல்லி இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரக்யா ஜெய்ஸ்வால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தினி சௌத்ரி, ஊர்வசி ரௌடேலா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிதாரா என்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு, தமன் இசை அமைத்துள்ளார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'டாக்கூ மஹாராஜ்', இந்திய பாக்ஸ் ஆபிஸில் லாபம் கொடுத்தது ஆனால், அதிரி புதிரி வசூல் எனக் கூறிவிட முடியாதுதான். ஆனால், Netflix-ல் வெளியான பிறகுதான் மக்கள் விழுந்தடித்து பார்க்கிறார்கள். உலக அளவில் டாப் 10 ஆங்கிலம் அல்லாத படங்களில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
Netflix-ல் முதல் வார OTT சாதனை
பிப்ரவரி 17 முதல் 23, 2025 வரை, 'டாக்கூ மஹாராஜ்' 2.4 மில்லியன் பார்வைகளை பெற்று Netflix-ல் நல்ல தொடக்கத்தை பெற்றது. உலக அளவில் டாப் 10 ஆங்கிலம் அல்லாத படங்களில் 5-வது இடத்தையும் பிடித்தது. நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த இந்த படம், இந்த வாரம் 13 நாடுகளில் டாப் 10 ட்ரெண்டிங்கில் இருந்தது.
மற்றொரு இந்திய திரைப்படமான 'தூம் தாம்' மட்டுமே டாப் 10 பட்டியலில் 'டாக்கூ மஹாராஜ்' திரைப்படத்தை விட முன்னிலையில் உள்ளது. யாமி கௌதம் மற்றும் பிரத்திக் காந்தி நடித்த இந்த திரைப்படம், இரண்டாவது வாரத்தில் 5.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம், இந்த பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

தென்னிந்திய படங்களை முந்திய 'டாக்கூ மஹாராஜ்'
Netflix-ல் 2024-2025 ஆம் ஆண்டுக்கு இடையில் வெளியான பல தென்னிந்திய படங்களின் முதல் வார பார்வைகளை 'டாக்கூ மஹாராஜ்' முறியடித்துள்ளது. கமல்ஹாசனின் 'இந்தியன் 2' (1.7 மில்லியன்) திரைப்படத்தை விட 41% அதிக வியூஸ் பெற்றுள்ளது. மேலும், 'காதலிக்க நேரமில்லை' (2.2 மில்லியன்), 'மெய்யழகன்' (1.9 மில்லியன்), 'சாவி' (1.8 மில்லியன்), 'பகீரா' (1.7 மில்லியன்) மற்றும் 'ரைபிள் கிளப்' (1 மில்லியன்) போன்ற படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.
'டாக்கூ மஹாராஜ்' எப்படி?
பாபி கொல்லி இயக்கிய இந்த லாஜிக் இல்லா மேஜிக் திரைப்படம் ஜனவரி 12, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உள்நாட்டில் 91.11 கோடி ரூபாய் வசூல் செய்தது. 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது தெலுங்குத் திரைப்படம் இதுவாகும். நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த இந்த திரைப்படம் உலக அளவில் 125.60 கோடி ரூபாய் வசூல் செய்து நிறைவு செய்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications