அந்த இடுப்பு மட்டும் என்ன ஆட்டம் ஆடுது.. குத்தாட்டம் போட்ட ரவீனா.. குதர்க்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் சாங்கானா "மன்மதராசா" பாட்டுக்கு 2k கிட்ஸ் ரவீனா போட்ட ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்களால் கமெண்டுகளை போடாமல் இருக்கவே முடியவில்லையாம்.

அதானே அது எப்படி முடியும்..சாயாசிங் கருப்பு மார்டன் உடையில் போட்ட குத்தாட்டத்தை ரவீனா புடவையில் வெறித்தனமா போட்டிருக்கிறார். பார்க்க பார்க்க பரவசம் தூண்ட தானே செய்யும்.

இனி இந்த ரவீனா புயலில் இருந்து இளைஞர்களின் மனது தப்பிப்பது என்னவோ கஷ்டம்தான் போல, இவருடைய ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இளைஞர்களின் இதயம் பறந்து வருகிறதாம்.

 புடவையிலேயே இந்த குத்து குத்துறாரே

புடவையிலேயே இந்த குத்து குத்துறாரே

செக்கசிவந்த பட்டுப்படவையில்
கலக்கலான ஆட்டம் போட்ட ரவீனாவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் இரண்டாவது பாகத்தில் சக்தி ஆக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அமைதியின் சொரூபமாக எப்போதுமே மென்மையான குரலில் பேசிக் கொண்டிருக்கும் சக்தி சீரியலை விட்டு வெளியே வந்த பிறகு ரவீனாவாக மாறி இவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து சொக்கி தான் போய் இருக்கிறார்களாம். அடடா..அந்த சீரியலில் நடிக்கும் அதே பெண் தானா இது என்று பலர் ஷாக்காகி இருக்கின்றனர். சீரியலில் இவர் கதாநாயகியாக மாறி இருந்தாலும் குழந்தை மணம் மாறாத பருவ மங்கையாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் இவரை பார்த்த பல ரசிகர்களும் ஸ்கூல் படிக்கிற பிள்ளைக்கு சீரியலில் கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார்களே என்று கூறிவருகின்றனர். உண்மையில் ரவீனா இப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருக்கிறாராம்.

அப்போ குழந்தை நட்சத்திரம் இப்போ கதாநாயகி

அப்போ குழந்தை நட்சத்திரம் இப்போ கதாநாயகி

இவர் சீரியலின் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு பள்ளி குழந்தையாக ராட்சசன் திரைப்படத்திலும், விஜய்யுடன் ஜில்லா படத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்களில் ஒரு சில சீன்களில் வந்து இருந்தாலும் இவர் நச்சென்று ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார். ஆனால் அதற்கு முன்பு இவர் குழந்தையாக இருக்கும்போதே தங்கம் சீரியலில் சின்ன வயது ரம்யாகிருஷ்ணனாக நடித்திருக்கிறார். இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் தற்போது தான் முதல் முறையாக கதாநாயகியாக மாறியிருக்கிறார். என்னதான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நான் இன்னும் குழந்தை தான் என்பதை பல நேரங்களில் நிரூபித்து வருகிறார். ரவீனா மௌனராகம் சீரியலில் நடிப்பதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் சக்தியின் கடைசி தங்கச்சியாக துருதுருவென கேரக்டரில் நடித்திருப்பார். இந்த சீரியலில் இவரை பார்த்த பல ரசிகர்கள் அவரை கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். காரணம் இவர் மீனாட்சியின் காதலை பிடிக்காமல் அவருடைய அம்மாவிடம் அடிக்கடி போட்டுக் கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்ததால் தான்.

வைரலான போட்டோ ஷூட்

வைரலான போட்டோ ஷூட்

பூவே பூச்சூடவா சீரியலில் கதை அப்படி....அதனால் தான் அப்படி நடித்தேன் ஆனால் உண்மையில் நான் காதலுக்கு என்றுமே சப்போர்ட் செய்வேன் என்று காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் காதலித்து தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். சும்மாவே இவர் பின்னாடி சுற்றும் ரசிகர்கள் இவர் இந்த மாதிரி பேசி இருப்பதை கேட்டதும் காலில் சலங்கை கட்டிக்கொண்டு தான் ஆடுகிறார்கள். ரவீனாவிற்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக ரசிகர்கள் இருக்கின்றனர். ஊரடங்கு நேரத்தில் ஒரு சில போட்டோசூட்களால் பெரும் வைரலாக மாறிவிட்ட இவரை அனைவருக்கும் பரிச்சயம் ஆக மாற்றியது மீம்ஸ்கள் தான். இவருடைய போட்டோசூட் போட்டோக்களை பார்த்து மீம்ஸ் கிரியேட் தங்களால் முடிந்த அளவுக்கு மீம்ஸ்களில் ரவீனாவை போட்டுக் தாக்கிவிட்டனர். அப்படி என்ன தான் போட்டோ எடுத்துவிட்டு விட்டார் என்று சொன்னால் வயதிற்கு மீறிய அளவில் புடவையில் இவர் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை குவித்து விட்டார். அதுவும் கருப்பு கலர் புடவையில் குஷி ஜோதிகாவை போலவே இவர் கலக்கலாக இடுப்பை காட்டி ஒரு போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இருந்தார். இந்த போட்டோக்கள் தான் முதல்முறையாக இவருக்கு பெரும் வைரலாக மாறியது.

புடவையிலும் செம குத்து

புடவையிலும் செம குத்து

இதுவரைக்கும் பலவிதமான போட்டோஸ்களை எடுத்துக் கொண்டு இருந்தாலும் சூட்டிங் நேரத்தில் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட வீடியோக்களில் ஆட்டம் போடுவது தான் இவருடைய என்டர்டைன்மென்ட்டாக இருக்கிறது. டான்சில் எனக்கு நிகர் எவரும் உண்டா என்று இவர் ஆடியிருக்கும் ஆட்டத்தை பார்த்து பிறருக்கு சவால் விடுகிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு புடவையிலும் சும்மா இறங்கி குத்தி இருக்கிறார். குத்தாட்டம் என்றால் இதுதான் என்று சர்டிபிகேட் கொடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு இவருடைய வெறித்தனமான பர்பாமென்ஸ் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இவருடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளும் லைக்களும் சும்மா குவிந்து வருகிறது. 'மன்மதராசா மன்மதராசா' என்று இவர் இடுப்பை வெடுக்கு , வெடுக்கு என்று ஆட்டி சும்மா இருக்கும் ரசிகர்களுக்கும் சூடு ஏற்றி விட்டார். இவருடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருடைய ஆட்டத்துக்கு முன்னாடி யாராலயும் வர முடியாது என்று இவரை உசுப்பி விட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+