"தாம் தக்க தையதக்க” லாரன்ஸ் மாஸ்டரோடு ஆட்டம் போட்ட KPY பாலா.. பிறகு வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: ருத்ரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கின்றனர்.
டான்ஸ் மாஸ்டராகவும் நடிகராகவும் ராகவா லாரன்ஸ் கலக்கிய தாம் தக்க தையத்தக்க பாடலுக்கு லாரன்ஸ் மாஸ்டருடன் கேபிஒய் பாலா மேடையில் அசத்தலாக ஆட்டம் போட்டு இருக்கிறார்.

தனக்கு வாய்ப்பு தந்த லாரன்ஸ் பற்றி கேபிஒய் பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவி பிரபலம்: விஜய் டிவி பாலாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் கலக்கப்போவது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். விஜய் டிவியில் இவர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பாலா தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ருத்ரன் திரைப்படம்: ராகவா லாரன்ஸ் மற்றும் பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ருத்ரன். இந்த திரைப்படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

பாடல்கள் வெளியீடு: இதைத்தொடர்ந்து விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில் அவ்வப்போது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
மாஸ்டர் உடன் டான்ஸ்: இந்த நிலையில் இந்த திரைப்படப் பாடலுக்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்வில் ராகவா லாரன்ஸ் மற்றும் கலக்கப்போவது யாரு பாலாவும் சேர்ந்து திருமலை படத்தில் இடம்பெற்ற, "தாம் தக்க தையத்தக்க" பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பாலா தன்னுடைய மனதில் இருக்கும் வார்த்தைகளை கொட்டி இருக்கிறார்.

நெகிழ்ச்சியான பதிவு: அதில் எங்கள் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் அடிமையான பாடலுக்கு என்னுடன் நடனமாடிய எங்கள் நடன ஜாம்பவான் லாரன்ஸ் மாஸ்டருக்கு மிக்க நன்றி. தாம் தக்க தீம்தக்க.. லவ் யூ லாட்ஸ் மாஸ்டர். எல்லாவற்றிற்கும் நன்றி, மிக்க நன்றி. தொகுப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று தன்னுடைய சந்தோஷத்தை, பகிர அதற்கு விஜய் டிவி பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications